Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
18 ஆண்டுகளுக்கு பின் ராகுவுடன் ஒன்றிணையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு பண இழப்பு ஏற்படும்.. உஷார்..
Mars Rahu Conjunction 2026 In Aquarius After 18 Years: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் ராகு ஒரு நிழல் கிரகம். இந்த ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர கதியில் பயணிக்கக்கூடியவர். மேலும் இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்.
தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். இந்த செவ்வாய் பெயர்ச்சி பிப்ரவரி மாதத்தில் நிகழவுள்ளது. இதனால் கும்ப ராசியில் மேஷம் மற்றும் ராகுவின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகமானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் உருவாக போகிறது. ஜோதிடத்தில் இந்த யோகம் ஒரு அசுப யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
முக்கியமாக நிதி இழப்புக்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது பிப்ரவரியில் உருவாகும் அங்காரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் ராகு சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். அவபெயர் ஏற்படக்கூடும். சமூகத்தில் மதிப்பு, மரியாதையை இழக்க நேரிடும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவுகளை பெற முடியாது. தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே இக்காலத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் செவ்வாய் ராகு சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே இதய நோயைக் கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பண இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் ராகு சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களும் ஆரோக்கிய பிரச்சனைகளால் நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். நீதிமன்ற வழக்குகளில் தோல்விகளை சந்திக்க நேரிடும். எதிரிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், பல எந்த முயற்சியிலும் தோல்விகள் ஏற்படும். இரத்தம் தொடர்பான நோய்கள் அதிகம் தொந்தரவு செய்யும். மருத்துவ செலவுகள் அதிகமாவதால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
