Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
164 ஆண்டுகளுக்கு பின் செவ்வாய் உருவாக்கும் பஞ்சாங்க யோகம்: இந்த 3 ராசிக்கு நாளை முதல் வெற்றிகள் குவியும்..
Panchank Yog On 07 January 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். நவகிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
தற்போது செவ்வாய் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இக்காலத்தில் செவ்வாய் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது பார்வைகளின் மூலமோ, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் ஜனவரி 07 ஆம் தேதி செவ்வாய் நெப்டியூனுடன் சேர்ந்து பஞ்சாங்க யோகத்தை உருவாக்கவுள்ளன.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். வேத ஜோதிடத்தின் படி, செவ்வாயும் நெப்டியூனும் ஒருவருக்கொருவர் 72 டிகிரியில் இருந்து, பஞ்சாங்க யோகத்தை உருவாக்கவுள்ளனர். தற்போது நெப்டியூன் மகர ராசியில் பயணித்து வருகிறது. இந்த நெப்டியூன் ஒரு ராசியில் சுமார் 14 ஆண்டுகள் வரை இருக்கும் மற்றும் ஒரு சுழற்சியை முடிக்க சுமார் 164 ஆண்டுகள் ஆகும்.
அந்த வகையில் செவ்வாய் நெப்டியூனால் உருவாகும் பஞ்சாங்க யோகம் சுமார் 164 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பஞ்சாங்க யோகத்தால் பல வழிகளில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். மன அமைதி கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் வேலை ரீதியாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். நல்ல பொருள் வசதிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
மிதுனம்
பஞ்சாங்க யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். மன ஆரோக்கியம் மேம்படும். பல புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
பஞ்சாங்க யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சிறப்பானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புத்திசாலித்தனமும், விவேகமும் வாழ்வில் வெற்றியைத் தரும். பணியிடத்தில் உங்களின் முயற்சிகள் பாராட்டப்படும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். கடின உழைப்பால் வருமானம் அதிகரிக்கும். எதிர்காலத்திற்காக நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications