Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: ஜனவரி இறுதியில் இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Mars Nakshatra Transit On 29 January 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களில் செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
அந்த வகையில் ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய் மகர ராசிக்கு செல்லவுள்ளார். அதைத் தொடர்ந்து ஜனவரி 29 ஆம் தேதி செவ்வாய் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர மாற்றத்தின் போது செவ்வாய் திருவோணம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன்.

இந்த சந்திரனின் நட்சத்திரத்திற்கு செவ்வாய் செல்வதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், இன்னும் சிலர் செவ்வாயின் ஆசியால் முடிவெடுக்கும் திறன் மேம்படும், தைரியம் அதிகரிக்கும், இலக்குகளை அடைவார்கள். இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடிவும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். ஆராய்ச்சியில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மொத்தத்தில் ஜனவரி இறுதி முதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் வெற்றிகளை குவிப்பார்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடனான உறவு இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்களுக்கு நிறைய லாபத்தை ஈட்டும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications