Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
2025 புத்தாண்டின் முதல் நாளில் செவ்வாய்-சந்திரன் உருவாக்கும் தன யோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Mars Moon Make Dhan Yog On 01 January 2025: இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த புத்தாண்டில் பல முக்கியமான கிரகங்கள் ராசியை மாற்றுவதால், இந்த 2025 ஆம் ஆண்டு சிறப்பானதாக கருதப்படுகிறது. அதுவும் புத்தாண்டின் முதல் நாளில் மிகவும் மங்களகரமான யோகம் உருவாகவுள்ளது.
அதுவும் 2025 ஜனவரி 01 ஆம் தேதி சந்திரன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். சந்திரன் மகர ராசியில் இருக்கும் போது, கிரகங்களின் தளபதியான செவ்வாய் இந்த ராசிக்கு 7 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் சுப யோகமான தன யோகம் உருவாகவுள்ளது. இந்த மங்களகரமான யோகம் புத்தாண்டின் முதல் நாளில் உருவாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது புத்தாண்டின் முதல் நாளில் உருவாகும் தன யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தன யோகத்தால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதோடு நீண்ட கால பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தன யோகத்தால் 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் சிறப்பானதாக இருக்கும். பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். முக்கியமாக திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தன யோகத்தால் புத்தாண்டின் தொடக்கம் அருமையாக இருக்கப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications