Latest Updates
-
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...
செவ்வாய் சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி யோகம்: ஜூலை 26ல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கபோகுது
Mars Moon Conjunction Make Mahalaxmi Yog On 26 July 2025: ஜோதிடத்தின் படி ஜூலை மாதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் பல ராஜயோகங்கள் உருவாகின்றன. முக்கியமாக ஜூலை மாத இறுதியில் மிகவும் மங்களகரமான மற்றும் சிறப்பு வாய்ந்த மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது சிம்ம ராசியில் உருவாகவுள்ளது.
ஜோதிடத்தில் மகாலட்சுமி ராஜயோகமானது செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும். தற்போது செவ்வாய் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 26 ஆம் தேதி சந்திரன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகமானது உருவாகவுள்ளது.

சந்திரன் இந்த ராசியில் 2 1/2 நாட்கள் இருப்பார். எனவே மகாலட்சுமி ராஜயோகத்தின் தாக்கமும் 2 1/2 நாட்கள் நீடித்திருக்கும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளனர்.
இதன் விளைவாக நிதி நிலையில் உயர்வு, வியாபாரத்தில் மகத்தான வெற்றி, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். அதோடு குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது செவ்வாய் சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. வாழ்க்கைத் துணையுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். வாக்குவாதங்களும், தவறான புரிதல்களும் நீங்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பல துறைகளில் நன்மைகளைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். அரசியல், ஊடகம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். நீண்ட காலமாக வேலையை முடிக்க கடினமாக உழைத்து வந்தால், வெற்றிகரமாக அதை முடிப்பீர்கள். லட்சுமி தேவியின் ஆசியால், புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். வணிகர்களுக்கு பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இதுவரை வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பணியிடத்தில் யாருடனாவது தகராறு இருந்தால், இக்காலத்தில் அது தீரும். மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் வெளிநாட்டில் இருந்து நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்களும் உள்ளன. ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











