Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
செவ்வாய்-சந்திரன் உருவாக்கும் மகாபாக்ய ராஜயோகம்: டிசம்பர் 17 முதல் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Maha Bhagya Rajyog 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்களிலேயே சந்திரன் மிகவும் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். அதுவும் இவர் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். குறுகிய நாட்களில் சந்திரன் ராசியை மாற்றுவதால், மற்ற கிரகங்களுடன் இணைந்து, அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.
அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் செவ்வாயும், சந்திரனும் இணைந்து மிகவும் மங்களகரமான மகா பாக்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவதோடு, அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியையும் பெறுவார்கள்.

ஜோதிடத்தின் படி, டிசம்பர் 17 ஆம் தேதி சந்திரன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் ஏற்கனவே செவ்வாய் பயணித்து வருகிறார். இதனால் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகா பாக்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகமானது டிசம்பர் 20 ஆம் தேதி வரை இருக்கும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப்போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் மகாபாக்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கனவுகள் நனவாகும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் மகா பாக்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். வணிகர்களுக்கு புதிய ஆர்டர் மூலம் நிறைய லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியும், நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் மகா பாக்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாகவும், இனிமையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
