Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
செவ்வாய்-சந்திரன் இணைவதால் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையே மாறப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா?
ஒவ்வொரு கிரக மாற்றமும் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் 2024-ன் கடைசி கிரக பெயர்ச்சி செவ்வாய் மற்றும் சந்திரன் இணைந்திருக்கும் போது நிகழ்கிறது. டிசம்பர் 10 முதல் இந்த கிரக சேர்க்கையின் பலன்கள் குறிப்பிட்ட ராசிகளில் பிரதிபலிக்கும். இந்த கிரகப் பெயர்ச்சி அவற்றின் சொந்த ராசியில் இருந்து நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும். சந்திரன் கடக ராசியிலும் செவ்வாய் மேஷ ராசியிலும் இடம் பெற்றுள்ளனர்.
டிசம்பர் 9 முதல் டிசம்பர் 15, 2024 வரை இந்த கிரக பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பல சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த கிரக பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களை பெரிய சாதனைகளை நோக்கி அழைத்துச் செல்லும். எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையால் சிறப்பான பலன்களை அடையப்போகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்கு இந்த கிரக சேர்க்கையால் அதிஷ்டம் அதிகரிக்கும். திடீரென ஏற்படும் தொழில் முன்னேற்றம் உங்களை ஆச்சரியப்படுத்தும். வேலையில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு அவர்களின் செயல்திறன் காரணமாக மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வருமான அதிகரிப்புக்கான சந்திப்பும் காணப்படும். வாழ்க்கையை மாற்றும் பலன்களை சந்திக்கப் போகும் காலமிது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையால் அபரிமிதமான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த கிரக பெயர்ச்சி பெரும்பாலும் வேலையின் அடிப்படையில் சாதகமான பலன்களைப் பெறுவதற்கு வழிவகுக்கிறது. நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும், இதனால் வருமானம் கூடும். வியாபாரிகளுக்கு வருமானம் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையால் பல நற்பலன்களை அனுபவிப்பார்கள். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்த பயணங்கள் அவர்களுக்கு பெரிய லாபத்தைக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிக்கும் வகையில் செயல்திறன் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்துவந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கூடுதல் வருமான ஆதாரங்கள் அவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியை நிரப்பும்.
கும்பம்
சந்திரனும், செவ்வாயும் இணைவது கும்ப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரப்போகிறது. அவர்கள் வியாபாரத்தில் கிடைக்கும் திடீர் பலன்களால் ஆச்சரியப்படுவார்கள். வேலை விஷயத்தில் அனைத்தும் சாதகமாக நடப்பதால் அலுவலகத்தில் எந்த நெருக்கடியான சூழலும் ஏற்படாது. பல சாதனைகளால் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி தேடி வரும். மாணவர்களின் ஆர்வம் அதிகரிப்பதால் படிப்பில் அவர்கள் பெரிய சாதனையை செய்யலாம். அவர்களின் நிதிநிலை திடீரென அதிகரிப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.
மீனம்
செவ்வாய்-சந்திரன் இணைவு மீன ராசியினருக்கு அதிர்ஷ்டக் கதவைத் திறக்கும். அரசாங்கம் கொடுக்கும் சில சலுகைகள் அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும். அலுவலக வேலைகள் அனைத்தும் சரியாக, எளிதாக முடிவடையும். அவர்களின் புத்திசாலித்தனமும், திறமையும் அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கும். பணியிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களின் மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கும். இந்த கிரக சேர்க்கையின் தனித்தன்மையால் வாழ்க்கையே சிறப்பாக மாறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

