Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
செவ்வாய்-கேது சேர்க்கையால் உருவாகும் 'அழிவுகரமான யோகம்': ஜூன் 7 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Mars Ketu Conjunction In Leo 2025: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படி ஒவ்வொரு மாதமும் பலவிதமான யோகங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் ஜூன் மாதத்தில் பல யோகங்கள் உருவாகின்றன. அதில் ஜூன் 07 ஆம் தேதி ஒரு அழிவுகரமான யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கையால் உருவாகிறது.
கிரகங்களின் தளபதியான செவ்வாய் ஜூன் 07 ஆம் தேதி சூரிய பகவானின் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான பயணித்து வருகிறார். இதனால் செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை சிம்ம ராசியில் நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 52 நாட்கள் நீடித்திருக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கையினால் மோசமான யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்வில் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக பண விஷயத்தில், ஆரோக்கிய விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது செவ்வாய்-கேது சேர்க்கையால் உருவாகும் அழிவுகரமான யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் காரணமாக மகர ராசிக்காரர்கள் நோய்களால் அவதிப்படலாம். பழைய நோய்கள் மீண்டும் தலைத்தூக்கி அவதிப்பட வைக்கலாம். மேலும் இக்காலத்தில் ஏதாவது ஒரு விஷயத்தால் மிகுந்த மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடும். எதிரிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பொறுமையாக எந்த வேலையையும் செய்ய வேண்டும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமடையும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் சிரமப்பட நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பண இழப்பை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை அதிகம் ஏற்படக்கூடும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இல்லாததால், எதிலும் தோல்விகளையே சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பணியிடத்தில் மிகுந்த வேலைப்பளுவை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications