Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
மிதுனத்தில் நுழையும் செவ்வாய்.. 12 ராசிகளும் வணங்க வேண்டிய தெய்வங்கள் யார் ?
செவ்வாய் பெயர்ச்சி ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. செவ்வாய் கிரகம், மிதுன ராசிக்குள் நுழைவதால், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு அசுப பலன்கள் கிடைக்கும்.. இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த தெய்வங்களை வணங்க வேண்டும்.. என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அதில், செவ்வாய் கிரகமானது, மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியாகும். செவ்வாய் கிரகம், ஆகஸ்ட் 26ஆம் தேதி மிதுன ராசியில் பிரவேசிப்பது மிகவும் விசேஷமானது. ஏனென்றால் அன்றுதான் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது..

மேலும் செவ்வாய், மிதுனத்திற்குள் நுழைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது, சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுத்தாலும் பலர் இந்தக் காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் வெற்றி வாய்ப்புகள் உண்டு. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு செல்வம் மற்றும் செழிப்பு அதிகரிக்கும். தைரியம் மேலோங்கும்.. அதையும் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.. ஆனால் சிலருக்கு கவலை தரும் காலமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் கவலைகள் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். அதனால் அவர்கள் அனைவரும் இந்த கோவிகளுக்கு சென்று வந்தால் சிறப்பாக இருக்கும் என்று பெருங்குளம் ராமகிருஷண ஜோதிடர் 12 ராசியினரும் வணங்க வேண்டிய தெய்வங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..
மேஷம்
செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
ரிஷபம்
வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வரவும்.
மிதுனம்
புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்
கடகம்
அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
சிம்மம்
ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.
கன்னி
அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
துலாம்
பரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்
தனுசு
சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
மகரம்
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
கும்பம்
விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
மீனம்
முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
