Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Mars Direct In Gemini 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் தான் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை இருப்பார். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் வலிமையாக இருந்தால், அந்நபர் நல்ல தைரியசாலியாக, அச்சமின்றி எதையும் துணிந்து செய்யக்கூடிய நபராக இருப்பார்.
இந்த செவ்வாய் கடந்த ஆண்டு டிசம்பர் 07 ஆம் தேதி கடக ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். 2025 புத்தாண்டின் தொடக்கத்தின் தொடக்கத்தில் கூட வக்ர நிலையில் தான் இருந்தார். இவர் 2025 ஜனவரி 21 ஆம் தேதி வக்ர நிலையிலேயே மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் 2025 பிப்ரவரி 21 ஆம் தேதி மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.

செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கு. தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படலாம். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்துடன், வியாபாரத்தை விரிவாக்கும் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications