Latest Updates
-
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..
மார்ச் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
March 2025 Monthly Career Horoscope In Tamil: மார்ச் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்களைக் காணக்கூடும். முக்கியமாக மார்ச் மாதத்தில் சனிப்பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
அதோடு கிரக நிலைகளின் மாற்றங்களினால் சில சுப மற்றும் ராஜயோகங்களும் உருவாகின்றன. இதன் விளைவாக சில ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களையும், இன்னும் சிலர் மோசமான பலன்களையும் பெறக்கூடும். இப்போது மார்ச் மாத கிரக நிலைகளால் தொழில் ரீதியாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் புதிதாக தொழிலை தொடங்க நினைத்தால் கடினமாக இருக்கும். இருப்பினும் கடினமாக உழைத்தால், விதியை மாற்றலாம். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் பணியிடத்தில் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் எடுக்கும் முயற்சிகளில் உடனடி வெற்றி கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து முயற்சித்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். எக்காரணம் கொண்டும் இந்த மாதத்தில் எதிர்மறை எண்ணங்களை மனதில் நுழையவிடாதீர்கள். இம்மாத இறுதியில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் உங்கள் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இருந்தாலும் சிறிது கடின உழைப்பு தேவைப்படும். வேலை தேடுபவர்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேணுவதன் மூலம், அவரது உதவியால் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
கடகம்
கடக ராசிக்காரர்களே! மார்ச் மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள். தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். மாத இறுதியில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! மார்ச் மாதம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைப்பதால், வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதன் மூலம் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! மார்ச் மாதம் தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும். இன்டர்வியூ மேற்கொண்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தால், நல்ல வெற்றியைப் பெறும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முக்கியமான வேலையை வெற்றிகரமாக முடித்து பாராட்டைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! மார்ச் மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். விரும்பிய வேலை கிடைப்பதால், மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் தொழில் குறித்த கவலை அதிகரிக்கலாம். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம். இதனால் மனதளவில் மோசமாக உணர்வீர்கள். மன அழுத்தத்தைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இந்த மாதத்தில் ஒரு நல்ல ஆலோசகரை அணுகி உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற சரியான முடிவை எடுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! மார்ச் மாதம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவு உருவாகும். உங்களின் நடத்தை பணியிடத்தில் நல்ல பெயரை வாங்கித் தரும். அதோடு பதவி உயர்வும் கிடைக்கலாம். மார்ச் மாதம் வேலையைப் பொறுத்தவரை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் உங்கள் அர்ப்பணிப்பு உங்களுக்கு வெற்றியைத் தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! மார்ச் மாதம் தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் நீங்கள் நிறைய போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்படலாம். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! மார்ச் மாதம் தொழில் ரீதியாக பல வெற்றிகளைத் தரும் மாதமாக இருக்கும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இந்த மாதத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நிதி உதவியால் விரும்பிய வேலையை வெற்றிகரகமா செய்து முடிப்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! மார்ச் மாதமானது நிதி ரீதியாக வாழ்க்கையில் பல சிக்கல்களைச் சந்திக்க வைக்கும். தொழில் ரீதியாக ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்களின் ஒரு தவறான முடிவு, உங்கள் கடின உழைப்பை அழித்துவிடும். ஆகவே எதிர்மறை எண்ணங்களை விடுத்து, வாழ்க்கையில் முன்னேற முயற்சிகளை செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications