Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
உங்க ராசியை சொல்லுங்க.. மகா சிவராத்திரி நாளில் நீங்க எந்த சிவ மந்திரத்தை சொல்லணும்-ன்னு சொல்றோம்..
Maha Shivratri 2025: மகா தேவரான சிவபெருமானுக்கு உரிய நாள் தான் மகா சிவராத்திரி. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி நாளானது மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் மகா சிவராத்திரியானது பிப்ரவரி 26 ஆம் தேதி வருகிறது.
இந்த மகா சிவராத்திரி நாளில் சிவ பக்தர்கள் சிவனை நினைத்து விரதமிருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபட்டு வருவார்கள். இந்நாளில் உலம் முழுவதும் உள்ள மக்கள் சிவாலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு நன்றி தெரிவிப்பார்கள்.

இந்த புனிதமான நாளில் சிவலிங்கத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து, பூஜைகளை செய்வார்கள். மேலும் சிவபெருமானுக்குரிய மந்திரங்கள் மற்றும் பாடல்களை பாராயணம் செய்வார்கள். இந்நாளில் ஒவ்வொருவரும் சிவபெருமானின் பரிபூர்ண ஆசியைப் பெற விரும்பினால், ராசிக்குரிய சிவ மந்திரத்தை சொல்வது நல்லது. இப்போது எந்த ராசிக்காரர்கள் எந்த சிவ மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் "ஓம் ருத்ராய நமஹ" என்னும் மந்திரத்தை சொல்வது நல்லது. இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் அனைத்து வகையான துன்பங்கள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் "ஓம் நமச்சிவாய நமஹ" என்னும் பஞ்சாக்ஷரி மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் அனைத்து வகையான தீமைகளும் விலகும்.
மிதுனம்
மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் மகேஷ்வராய நமஹ" என்னும் சிவனுக்கு உரிய மந்திரத்தை சொல்வதன் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, சிவனின் அருளால் இலக்குகளை அடைய முடியும்.
கடகம்
கடக ராசியைச் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் "ஓம் நாகேஸ்வராய நமஹ" என்னும் மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம், சனி மற்றும் ராகுவுடன் தொடர்புடைய கால சர்ப்ப தோஷம் மற்றும் பிற தோஷங்கள் நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் "ஓம் நமசிவாய காலம் மகாகால் காலம் கிருபாலம் ஓம் நமஹ" என்னும் மந்திரத்தை பாராயணம் செய்து, சிவபெருமானை வழிபட்டு வந்தால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் குறையும்.
கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் ஸ்ரீகாந்தாய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் உள்ள இருள் நீங்கி, சிவனின் அருளால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் நமசிவாய குரு தேவே நமஹ" என்னும் மந்திரத்தை மகா சிவராத்திரி நாளில் சொல்வதன் மூலம், சிவனின் அருளால் வாழ்க்கையில் புதிய வழிகளையும், புதிய வாய்ப்புக்களையும் பெறலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் சந்திரமௌலேஷ்வர் நமஹ" என்னும் சிவ மந்திரத்தை பாராயணம் செய்தால், பதட்டம், மனச்சோர்வு மற்றும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ உள்ள உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் "ஓம் நமோ பகவதே ருத்ராய" என்னும் சிவ மந்திரத்தை மகா சிவராத்திரி நாளில் பாராயணம் செய்ய வேண்டும். இந்த மந்திரத்தை தனுசு ராசிக்காரர்கள் சொல்வதன் மூலம் உள் வலிமை அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் ஷாம்பவே நமஹ" என்னும் மந்திரத்தை சொல்வது நல்லது. இந்த மந்திரத்தை சொன்னால் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். சிவபெருமானின் ஆசியால் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷிய மாமிருதத்" என்னும் மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம், வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதிகபட்ச நன்மைகளைப் பெற இரவு முழுவதும் மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜபிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் பசுபதயே நமஹ" என்னும் மந்திரத்தை மகா சிவராத்திரி நாளல் சொல்வதன் மூலம், சிவனின் ஆசியால் வெற்றிகள் குவியும் மற்றும் இலக்குகளை எளிதில் அடையலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications