Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
மகா சிவராத்திரி நாளில் உங்க ராசிப்படி இந்த சிவ மந்திரத்தை சொல்லுங்க.. சிவனின் அருளால் நினைச்சது நடக்கும்..
Maha Shivratri 2025: மகா சிவராத்திரி இந்துக்கள் கொண்டாடும் சிவபெருமானுக்கு உரிய விரதமாகும். இந்நாளில் சிவ பக்தர்கள் சிவனின் அருளைப் பெற இரவு முழுவதும் கண் விழித்து, சிவபெருமானுக்கு பூஜை செய்தும், சிவனுக்குரிய மந்திரங்கள் மற்றும் பாடல்களைப் பாராயணம் செய்தும், சிவபெருமானை வழிபடுவார்கள். இந்த மகா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி அன்று இரவில் கொண்டாடப்படும்.
இந்த ஆண்டின் மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி வருகிறது. இந்த மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை சந்தோஷப்படுத்தி அவரது ஆசியைப் பெற விரும்பினால், ராசிக்கேற்ற சிவ மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். இப்போது 12 ராசிக்காரர்களுக்குமான சிவ மந்திரம் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். எனவே மேஷ ராசிக்காரர்கள் மகா சிவராத்திர நாளில் "நாகேஸ்வராய நமஹ" என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் "ஓம் திரிநேத்ராய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி அன்று "ஓம் ஸ்ரீகந்தாய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை சொல்ல வேண்டும்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடக ராசியைச் சேர்ந்தவர்கள் சிவனை மகிழ்விக்க விரும்பினால், "ஓம் ஞானபூதாய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை சொல்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானின் அருளைப் பெற நினைத்தால், "ஓம் ஓங்காரயே நமஹ" என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் "ஓம் யுக்தகேஷாத்மரூபாய நமஹ" என்னும் மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த துலாம் ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளன்று "ஓம் நந்தேஷ்வராய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை சொல்ல வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் "ஓம் கங்கேத்ராய நமஹ" என்னும் சில மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த தனுசு ராசிக்காரர்கள் சிவபெருமானின் ஆசியைப் பெற மகா சிவராத்திரி நாளில் "ஓம் ஞானபூதாய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை சொல்ல வேண்டும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவான் சிவனின் தீவிர பக்தர். எனவே மகர ராசிக்காரர்கள் சிவனின் ஆசியைப் பெற மகா சிவராத்திரி நாளில் "ஓம் சோமநாதாய நமஹ" என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான். எனவே கும்ப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளன்று "ஓம் தத்புருஷாய நமஹ" என்னும் சிவபெருமானுக்குரிய மந்திரத்தை சொல்ல வேண்டும்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த மீன ராசியைச் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரியின் போது "ஓம் தயாநிதி நமஹ" என்னும் சிவனின் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications