Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
இந்த 4 ராசிக்காரர்கள் பிறக்கும் போதே அற்புதமான அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
அதிர்ஷ்டம் என்பது அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஏங்கும் ஒரு விஷயமாகும். இது சிலருக்கு கிடைக்கலாம், சில இறுதிவரை கிடைக்காமலேயே போகலாம். நீங்கள் ஒரு விஷயத்தின் மீது ஆசைப்பட்டு அதற்காக கடினமாக உழைத்து நீண்ட போராட்டங்களுக்கு பிறகு அதை அடையும் போது அதே விஷயத்தை எந்தவித சிரமமும் இல்லாமல் அதை எளிதில் அடைவதை பார்த்திருக்கிறீர்களா? அதற்கு பெயர்தான் அதிர்ஷ்டம்.
இந்த அதிர்ஷ்டம் சிலருக்கு கடின உழைப்பால் கிடைக்கும், சிலருக்கு பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாக இருப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் அற்புதங்களும், வெற்றிகளும் நிறைந்திருக்கும். அவர்கள் விரும்பும் விஷயங்கள் எளிதில் அவர்களுக்கு கிடைக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட ராசிகளில் முதலிடத்தில் இருக்கிறார்கள். குருபகவானால் ஆளப்படும், தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் ஆழ்ந்த நிம்மதியை அடையும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களைப் போலவே சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், போராட்டங்களைத் தவிர்த்து கடினமான சூழ்நிலைகளிலிருந்து தப்பிக்கும் திறனை அவர்களுடன் பிறந்த அதிர்ஷ்டம் அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
அவர்களின் ரிஸ்க் எடுக்கும் நடத்தை மற்றும் குழந்தைத்தனம் ஆகியவை பார்ப்பதற்கு பொறுப்பற்றதாகத் தோன்றலாம். அவர்கள் பெரும்பாலும் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் எல்லாம் தங்களுக்கு சாதகமாக நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் நெப்டியூனால் ஆளப்படுகிறார்கள், அதேசமயம் குருபகவான் அவர்களுக்கு பக்க பலமாக இருக்கிறார். இந்த கிரகங்கள் ஆழமான உள்ளுணர்வு, படைப்பாற்றல் மற்றும் சாதகமான சூழ்நிலைகளை ஈர்க்கும் இயற்கையான அதிர்ஷ்டத்தை வழங்குகிறது.
அவர்களின் வெளிப்படையான இயல்பும், பரந்த மனதும் அவர்களை அதிர்ஷ்டத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. அவர்கள் தொழில் வாழ்க்கையில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவர்களின் காதல் வாழ்க்கையிலும் சரி, திருமண வாழ்க்கையிலும் சரி அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கு காரணம் அவர்களின் ஆளும் அதிபதியான சூரியன், ஏனெனில் சூரியன் கிரகங்களின் ராஜாவாக இருக்கிறார். சூரியனின் ஆசீர்வாதத்தால் சிம்ம ராசிக்காரர்கள் செல்வாக்குமிக்கவர்களாக இருப்பார்கள் மற்றும் அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருப்பார்கள்.
சூரியன் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறன்களை அளிக்கிறது. எனவே , மேஷ ராசிக்காரர்கள் வெற்றி, வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை எளிதில் கவர முடியும். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் சக்திவாய்ந்தது, எந்த முடிவையும் அச்சமின்றி துணிச்சலுடன் எடுக்கும் அவர்கள் எளிதில் வெற்றியை அடைவார்கள்.
ரிஷபம்
அன்பு, வசீகரம் மற்றும் காந்தத்தன்மை ஆகியவற்றின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள், இயற்கையாகவே அதிர்ஷ்டத்தை ஈர்க்கக் கூடியவர்கள். அவர்களின் வசீகரம் அனைவரையும் ஈர்க்கிறது. வாழ்க்கையில் அவர்களின் எதார்த்த அணுகுமுறை, வெற்றிகரமான முடிவுகளைத் தரும் நிலையான, நிலையான நடைமுறைகளில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.
அவர்கள் பிடிவாதக்காரர்களாக இருந்தாலும், அது அவர்களின் வெற்றியுடன் தொடர்புடையது. ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டால் அதை அடையாமல் விட மாட்டார்கள். அவர்களின் இயற்கையான அதிர்ஷ்டம் அவர்கள் விரும்பும் வெற்றியை அடைவதை மிகவும் எளிதாக்குகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
