Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
சனி பகவானின் ஆசியால் 2026 ஆம் ஆண்டு இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
2026 Lucky Zodiac Signs: ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் ஒருவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான கிரகமாகும். இந்த சனி பகவான் நீதி, ஒழுக்கம், கர்மா ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவர் தங்களது வாழ்க்கையில் பலவிதமான சோதனைகளை சந்திக்க காரணமே இந்த சனி பகவான் தான்.
இப்படிப்பட்ட சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலனை தரக்கூடியவர். சனி பகவானின் ஆசி ஒருவருக்கு இருந்தால், ஆண்டியும் அரசனாவான். அந்த அளவில் ஏழையையும் பணக்காரராக்கும் சக்தி சனிபகவானுக்கு உள்ளதாக நம்பப்படுகிறது.

இவ்வளவு சக்தி வாய்ந்த கிரகமான சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார். சொல்லப்போனால் 2026 ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் மீன ராசியில் தான் பயணிக்கவுள்ளார்.
இப்படி மீன ராசியில் இருக்கும் போது, அந்த சனி பகவான் மற்ற கிரகங்களுடன் சேர்ந்தோ அல்லது அதன் நிலைகளின் மூலமோ மனித வாழ்க்கையில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துவார். இப்போது 2026 ஆம் ஆண்டு முழுவதும் மீன ராசியில் பயணிக்க போகும் சனி பகவானால், எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு பொறுமை, கடின உழைப்பு மற்றும் செயல்களின் பலன்கள் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். இந்த ஆண்டின் கஷ்டங்கள் மற்றும் முயற்சிகள் இருந்தாலும், சனி பகவான் நல்ல வெற்றியைப் பெற உதவுவார். சனி பகவானின் ஆசியால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
தொழிலில் இதுவரை சந்தித்து வந்த தடைகள் நுங்கும். கடின உழைப்புக்கான பலன் இந்த ஆண்டில் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். ஆனால் இந்த ஆண்டில் அவசரமாக எதிலும் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். பொறுமையைக் கடைப்பிடித்தால் மட்டுமே, வெற்றி கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான உறவு வலுவாக இருக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் அஷ்டம சனி நடக்கும். இதனால் வாழ்வின் சில பகுதிகளில் தடைகள், தாமதங்கள் மற்றும் சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும் சனி பகவான் வேலை, ஆரோக்கியம் மற்றும் உறவுகளில் அவ்வப்போது சவால்களை ஏற்படுத்தக்கூடும்.
சிரமங்கள் மற்றும் தாமதங்கள் இருந்தாலும், விடாமுயற்சியுடன் நேர்மையாக செயல்பட்டால் நிலையான வெற்றி கிடைக்கும். மேலும் இந்த ஆண்டில் சனி பகவான் கட்டுப்பாடு, ஒழுக்கம் மற்றும் பொறுமையைக் கற்றுக் கொடுப்பார். இது எதிர்காலத்தில் நல்ல பலனைத்தரும். இதுவரை நிதி பிரச்சனைகளை சந்தித்து வந்தால், 2026 ஆம் ஆண்டில் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு பொறுமை, கடின உழைப்பு மற்றும் செயல்களின் அடிப்படையில் சனி பகவான் பலன்களைத் தருவார். மேலும் சனி பகவான் இந்த ஆண்டில் ஒழுக்கத்தையும், நேர்மையையும் கற்றுக் கொடுப்பார். அதே வேளையில் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்துவார். சனி பகவானின் ஆசியால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும். எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் இந்த புதிய ஆண்டில் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலை உயர்வடையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் ஏழரை சனியின் இறுதி கட்டம் நடக்கும். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் ஆசியால் இந்த ஆண்டில் நல்ல வெற்றியும், லாபமும், நிதி முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சனி பகவானின் ஆசியால் உறவுகள் வலுவடையும். எப்பேற்பட்ட சவால்களையும் திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











