Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
Libra Horoscope 2025: துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கப்போகுது? விளக்கும் ஜோதிடர்..
Libra Horoscope 2025 In Tamil: 2025 ஆம் ஆண்டு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. சனி, ராகு கேது, குரு பெயர்ச்சியாலும், நவ கிரகங்களின் பயணத்தாலும் துலாம் ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது? பொருளாதார நிலை எப்படி இருக்கும். நல்ல வேலை கிடைக்குமா? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் விரிவாக கூறியுள்ளார். வாருங்கள், துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு 2025 ஆம் ஆண்டு திடீர் திருப்பங்களைத் தரப்போகிறது. கடந்த காலங்களில் அஷ்டம குரு, ஆறாம் இட ராகு பயணத்தால் பல சிரமங்களை பட்டிருப்பீர்கள். இனி எல்லாம் சுகமே என்பது போல குரு, சனி, ராகு கேது கிரகங்கள் அள்ளித்தரப் போகின்றன.

சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உங்கள் ராசிக்கு 6 ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஆண்டின் இறுதியில் 10 ஆம் வீட்டிற்கும் குரு மாறப்போவது சிறப்பு. ராகு பகவான் மே மாதம் முதல் 5 ஆம் வீட்டிற்கும் கேது உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர்.
வேலை, தொழில்
ஆறாம் வீடு ருண ரோக சத்ரு ஸ்தானம். அந்த வீட்டில் சனிபகவான் அமரப்போவது சிறப்பு. எதிரிகள் தொல்லை ஒழியும் கடன் பிரச்சினைகள் தீரும். இதுவரை போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தீர்கள். இனி வெற்றிக்கனியை ருசிக்கப் போகிறீர்கள். இனி தொட்டதெல்லாம் வெற்றியாகும். தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். சனி பகவான் அள்ளித்தரப்போகிறார்.
பொருளாதார நிலை
லாபத்தை அள்ளித்தரும் குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. மே மாதம் முதல் குரு பகவான் 9 ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப் போவதால் உங்களின் பொருளாதார வசதிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
குடும்ப வாழ்க்கை
குடும்பத்தில் நிம்மதியும் உற்சாகமும் பிறக்கும். தம்பதியரிடையே ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்து பங்கு, பாகங்கள் கிடைக்கும்.
நிதி நிலை மேம்படும். சுப செய்திகள் தேடி வரும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கும் தம்பதியினருக்கு நல்ல செய்திகள் தேடி வரும். அக்டோபர் மாதத்தில் குரு பகவான் அதிசாரமாக 10ஆம் வீட்டிற்கு வந்து சில மாதங்கள் பயணம் செய்வதால் வேலை தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும்.
பெண்கள்
ராகு கேதுவின் பயணம் மே மாதம் வரைக்கும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எத்தனையோ விசயங்களில் ஏமாந்து போயிருப்பீர்கள். அதை எல்லாம் படிப்பினையாக எடுத்துக்கொண்டு இனி கவனமாக இருங்கள்.
மாணவர்கள்
2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு ராகு கேதுவின் பயணம் உங்களுக்கு அற்புத மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. பணம் பல வழிகளிலும் வந்து சேரும். உங்களிடம் பணம் கடனாக வாங்கி விட்டு ஏமாற்றியவர்கள் தேடி வந்து பணத்தை கொடுத்து விட்டு போகும் காலம் தேடி வரப்போகிறது.
உயர்கல்வி படிக்க முயற்சி செய்யும் மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கப்போகிறது. வெளிநாடு சென்று படிக்கும் யோகம் தேடி வரப்போகிறது. மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தை தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications