Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
Leo Horoscope 2025: சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கப்போகுது? புட்டுபுட்டு வைக்கும் ஜோதிடர்..
Leo Horoscope 2025 In Tamil: 2025 ஆம் ஆண்டு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. சனி, ராகு கேது, குரு பெயர்ச்சியாலும், நவ கிரகங்களின் பயணத்தாலும் சிம்ம ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது? பொருளாதார நிலை எப்படி இருக்கும். நல்ல வேலை கிடைக்குமா? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் விரிவாக கூறியுள்ளார். வாருங்கள், சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரணம் கண்டச்சனியாக கவலை ஏற்படுத்திய சனி பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு வரப்போகிறார். குருபகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கும் பின்னர் விரைய ஸ்தானத்திற்கும் வரப்போகிறார். பணவரவும் அதற்கேற்ப சுப விரைய செலவுகளும் வந்து போகும். அஷ்டம வீட்டில் உள்ள ராகு ஏழாம் வீட்டிற்கும் இரண்டாம் வீட்டில் உள்ள கேது உங்கள் ஜென்ம ராசிக்கும் வரப்போகிறார்.

குடும்ப வாழ்க்கை
அஷ்டம சனி காலம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வாழ்க்கை துணையுடன் பேசும் போது கவனம் தேவை. பண விஷயங்களில் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். சிறு சிறு பிரச்சினைகள் சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் கவனம் தேவைப்படும். இரவு நேர பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது.
வேலை தொழில்
ஆண்டின் முற்பகுதியில் தொழிற் ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் வேலை தொழிலில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவார். 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்யப் போவதால் கை நிறைய சம்பளத்தில் வேலை கிடைக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு பிரமோஷனும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைக்கும் முடிவுக்கு வரும். அஷ்டம சனி காலம் என்பதால் வேலை செய்யும் இடத்தில் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்து கொள்வது அவசியம். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது.
பொருளாதார நிலை
உங்கள் ராசிக்கு குரு பலன் வந்து விட்டதால் திருமண யோகம் கைகூடிவரும். அதே நேரத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் சுப செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. ஆண்டின் பிற்பகு குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும். கூட்டு தொழில் சிறப்படையும். கேது உங்கள் ராசியில் வந்து அமரப் போகிறார் ஜென்ம கேது மன குழப்பத்தை ஏற்படுத்தும் தொழில் வியாபார விஷயமாக முக்கிய முடிவு எடுக்கும் போது ஆலோசனை தேவை.
பெண்கள்
கண்டச்சனி காலத்தில் கஷ்டங்களை அனுபவித்த உங்களுக்கு அஷ்டம சனியும் சில சோதனைகள் தரப்போகிறது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பதற்றத்தோடு இருப்பீர்கள். காரணமான உணவுகளை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது. எத்தனையோ இன்னல்களை கடந்து வந்திருப்பீர்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை. குடும்ப பிரச்சினைகளை அடுத்தவர்களிடம் தெரிவிக்காமல் இருப்பது நல்லது.
மாணவர்கள்
கண்டச்சனி காலத்தில் மாணவர்கள் சில சோதனைகளை சந்தித்து இருப்பீர்கள். பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் திரும்ப திரும்ப படித்து எழுதி பார்ப்பது நல்லது. 2025 மார்ச் மாதத்திற்குப் பிறகு அஷ்டம சனி ஆரம்பமாவதால் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கவனம் தேவை. பொறுப்போடு கவனமாக படித்தால் மட்டுமே தேர்வுகளை வெற்றி பெற முடியும் விழிப்புணர்வு அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











