Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
லட்சுமி யோகத்தால் 2026-ன் தொடக்கமே இந்த 3 ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கப்போகுதாம்..உங்க ராசி இதுல இருக்கா?
2026 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கப் போகிறது. 2026 ஆம் ஆண்டு புதிய மாற்றங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் ஆண்டாக இருக்கும். ஏனெனில் வரப்போகிற ஆண்டில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெறப்போகிறது. அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. பெரும்பாலும், புத்தாண்டு பல ராஜ யோகங்களுடன் தொடங்கப்போகிறது. இந்த ராஜயோகங்கள் சில ராசிக்காரர்களின் தலையெழுத்தை மாற்றப்போகிறது.
2026-ல் உருவாகப்போகும் மங்களகரமான யோகங்களில் ஒன்று லட்சுமி யோகம். 2026 ஆம் ஆண்டில், குருபகவான் மிதுன ராசியில் நுழைகிறார். இதன் விளைவாக லட்சுமி ராஜ யோகம் ஏற்படுகிறது. சுக்கிரன் மிதுன ராசிக்கு மாறுவதும், குருபெயர்ச்சியும் லட்சுமி யோகத்தை ஏற்படுத்துகின்றன. புத்தாண்டின் தொடக்கமும், இந்த லட்சுமி யோகமும் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக் கதவுகள் திறக்குப் போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் லட்சுமி தேவியின் பூரண ஆசீர்வாதத்தைப் பெற போகிறார்கள். அது மட்டுமின்றி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவை நிறைந்திருக்கும். புதிய வாகனம் வாங்குவதற்கும், புதிய சொத்துக்களை வாங்குவதற்கும் இந்த யோகம் உங்களுக்கு உதவியாக வாய்ப்புகளைக் கொடுக்கும். கடந்த காலத்தில் நிலவி வந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
வெளிநாட்டுப் பயணத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடிவரும். உங்கள் வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த தடங்கல்கள் இப்போது முடிவடையும். தொழில் தொடங்குவதற்கு இது மிகவும் சாதகமான நேரம். வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமானதாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் தரமான நேரத்தை செலவிடலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு லட்சுமி யோகம் பல சாதகமான மாற்றங்களைத் தரப்போகிறது. இந்த யோகம் அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை அளிக்கப்போகிறது. வியாபாரிகள் பெரிய லாபங்களை எதிர்பார்க்கலாம், அதே நேரத்தில் வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வுகள் அல்லது ஊதிய உயர்வுகள் பற்றிய நேர்மறையான செய்திகளைப் பெறலாம்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் நிறைந்திருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, காதல் வாழ்க்கை நம்பிக்கைக்குரியதாக இருக்கும். உங்கள் மனைவி அல்லது காதலி உறுதியான ஆதரவை வழங்குவார்கள். மொத்தத்தில் இது நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் முன்னேற ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சகல நன்மைகளையும் அளிக்கப்போகிறது. இந்த ராஜயோகத்தின் காரணமாக அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முடிவடையும். அவர்களின் பொருளாதார நிலை இப்போது பலமடங்கு அதிகரிக்கும். அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். இது வேலை செய்பவர்களுக்கு பல நேர்மறையான நன்மைகளைத் தருகிறது.
அலுவலகத்தில் நிலவி வந்த பணிச்சுமை குறைவதால் மன அழுத்தம் குறையும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும். அவர்களின் தனிப்பட்ட ஆசைகள் இப்போது நிறைவேறும். காதலர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய லாபங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
