Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
சுக்கிரன்-புதன் இணைந்து உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையை ஓஹோனு மாத்தப்போகுதாம்...
ஜோதிடத்தில் கிரக சேர்க்கைகளின் போது பல யோகங்கள் உருவாகின்றன, அதில் சுப, அசுப யோகங்கள் இரண்டுமே இருக்கலாம். இத்தகைய கிரக சேர்க்கைகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வருகின்றன. அதேபோல, லக்ஷ்மி நாராயண யோகம் என்பது சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் உருவான ஒரு சுபச் சேர்க்கையாகும். இது ஒரு ராஜயோகமாகும்.
லக்ஷ்மி நாராயண யோகத்தை அனுபவிக்கும் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். நவகிரகங்களில் சுக்கிரன் செல்வம், அழகு, ஆடம்பரம் மற்றும் காதல் போன்றவற்றின் அதிபதியாவார். புதன் புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு மற்றும் நகைச்சுவை உணர்வின் அதிபதி. லக்ஷ்மி நாராயண யோகத்தின் போது புதன் விஷ்ணு ஸ்தானத்திலும், சுக்கிரன் லக்ன ஸ்தானத்திலும் காணப்படுகின்றனர்.

இந்த இரண்டு கிரகங்களும் ஒருவரின் ராசியில் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் பெரிய அதிர்ஷ்டசாலியாக இருப்பார், மேலும் மற்றவர்களின் மரியாதையையும், அன்பையும் பெறுவார்கள். இன்னும் ஐந்து நாட்களில் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. அக்டோபர் 13-ம் தேதி வரை சுக்கிரன் அதன் மூல திரிகோண ராசியான துலாம் ராசியில் இருக்கிறார். அக்டோபர் 10-ம் தேதி புதனும் இந்த ராசியில் நுழைகிறார். இதனால் புதன் - சுக்கிரன் இணைவு ஏற்பட்டு லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகும். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் இந்த யோகத்தால் அதிர்ஷ்டமடையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் லக்ஷ்மி நாராயண யோகத்தால் நற்பலன்களை அனுபவிக்கலாம். இந்த ராசியின் 7-வது வீட்டில் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் பெரிய வெற்றி பெறுவார்கள். அவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழல் உருவாகும்.
வேலையில் நேர்மையாக இருப்பதால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் வெளிநாட்டில் வேலை செய்யும் ஆசை துளிர்விடும். வியாபாரத்தில் புதன், சுக்கிரனின் அனுக்ரஹத்தால் லாபமும், இதர ஆதாயங்களும் உண்டாகும்.
விருச்சிகம்
லக்ஷ்மி நாராயண யோகம் விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தரப்போகிறது. இந்த ராசியின் 6-ம் வீட்டில் சுக்கிரன்-புதன் இணைவு நடைபெறுகிறது. எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் இந்த காலகட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் மனநிறைவையும் அமைதியையும் உணர்வார்கள்.
வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய லாபங்கள கிடைப்பதற்கு இது சாதகமான நேரமாகும். பொருளாதார நிலை வெகுவாக மேம்படும். ஆரோக்கியத்தில் சிறிது பின்னடைவு ஏற்படலாம், எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
சிம்மம்
லக்ஷ்மி நாராயண யோகத்தால் நற்பலன்களை அனுபவிக்கப் போகும் மற்றொரு ராசி சிம்மம். இந்த ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரன் மற்றும் புதன் மூலம் ஆசீர்வதிக்கப்படுவார்கள். வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெறுவார்கள், இதனால் வாழ்க்கையில் திருப்தியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
நீண்ட காலமாக முடிக்கப்படாத பணிகள் மீண்டும் தொடங்கி முடிக்கப்படும். வேளையில் இருப்பவர்களுக்கு புதிய அதிகாரங்களும், பொறுப்புகளும் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெற ஏற்ற காலமாகும். கடின உழைப்பிற்கு ஏற்ற வெகுமதிகள் கிடைக்கும். பொருளாதார நிலை வெகுவாக மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
