Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
லட்சுமி நாராயண யோகம் கடக ராசியில் உருவாகுவதால் கோடிகளை குவிக்கப்போற 3 ராசிகள் இவங்கதான்...!
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுமே தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது அவை சில சுப யோகங்களையும், அசுப யோகங்களையும் உருவாக்குகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 21, 2025 அன்று அதிகாலை 1:08 மணிக்கு லட்சுமி நாராயண யோகம் கடக ராசியில் உருவாகிறது.
லட்சுமி நாராயண யோகம் என்பது ஜோதிடத்தில் செல்வம், செழிப்பு, புத்திசாலித்தனம் மற்றும் சமூக அந்தஸ்தை குறிக்கும் மிகவும் சக்திவாய்ந்த யோகமாகும். இந்த யோகம் நாராயணன் மற்றும் லட்சுமி தேவிக்கு இடையேயான சாதகமான நிலை மற்றும் உறவின் காரணமாக உருவாகிறது, இது புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களால் உருவாகிறது.

இந்த சக்திவாய்ந்த யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் மற்றும் சிறப்பான வருங்காலத்தை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு வருமானம் மற்றும் குடும்ப ஸ்தானமான 2 வது வீட்டில் சுக்கிரனும் புதனும் அமர்வார்கள். இது அவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் காலகட்டமாகும். புதிய நிதி வாய்ப்புகளைப் உருவாக்குவதில் இந்த லட்சுமி நாராயண யோகம் மிகவும் சாதகமான பலனைத் தரும். உங்கள் பணத்தில் யாரிடமாவது சிக்கியிருந்தால், அதை இப்போது நீங்கள் திரும்ப பெற முடியும்.
கலைத்துறையில் பணி புரிபவர்களுக்கு இந்த யோகம் மிகவும் சாதகமான பலன்களைத் தரும். அவர்களின் குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும், மேலும் கடந்த காலத்தில் நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். இந்த காலகட்டத்தில் அவர்களின் பேச்சு வசீகரமாக மாறும், மேலும் புத்திசாலித்தனமாகவும் பேசுவதன் மூலம் அவர்களின் பல பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் 21 முதல் இந்த யோகம் பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யோகம் அவர்களுக்கு 9வது வீட்டில் உருவாகிறது. வணிக மாற்றங்கள் அவர்கள் வாழ்க்கையில் நன்மைகளை இரட்டிப்பாக்கும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
வணிகத்தில் லாபங்கள் அதிகரிக்கும். இந்த மாதம் அவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் ஆச்சரியப்படத்தக்க லாபங்களைக் காண்பார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இரு மடங்காக அதிகரிக்கும்.குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஆரோக்கியமும் அவர்களுக்கு திருப்திரகமாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களின் 5-வது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகுவதால் அவர்கள் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த யோகத்தால் அவர்களின் நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும். அவர்கள் வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வாழ்வின் பல விஷயங்களில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் மற்றும் திறமைகள் அதிகரிக்கலாம். குறிப்பாக இப்போது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மேலும் உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகளைப் பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

