Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
தீபாவளிக்கு முன் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு நிதி நிலையில் உயர்வு ஏற்படப்போகுது..
Lakshmi Narayan Rajyoga In Scorpio Before Diwali 2024: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதோடு அந்த கிரகங்கள் அடிக்கடி மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் ராஜயோகங்களையும் உருவாக்கி, வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அக்டோபர் மாத தொடக்கத்தில் விருச்சிக ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் அக்டோபர் இறுதியில் விருச்சிக ராசிக்குள் நுழைந்து, சுக்கிரனுடன் இணைந்து மிகவும் மங்களகரமான ராஜயோகமான லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன், எதிர்பாராத நிதி நன்மைகளையும் பெறக்கூடும். இப்போது விருச்சிக ராசியில் உருவாகவுள்ள லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இநத ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். தாயுடனான உறவு இனிமையாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடினமான சூழ்நிலைகளையும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நன்கு சமாளிப்பீர்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். குழந்தை தொடர்பான நற்செய்திகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்கார்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ இக்காலம் சாதகமாக இருக்கும். வணிகர்கள் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவார்கள். பேச்சாற்றல் சிறப்பாக மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பேச்சின் மூலம் முக்கிய வேலைகளை முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications