Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
மகா சிவராத்திரி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Lakshmi Narayan Rajyog On Mahashivratri 2026: மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமானுக்கு உகந்த தினம் தான் மகா சிவராத்திரி. என்ன தான் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், தை மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சிவராத்திரியை மகாசிவராத்திரி என்று அழைப்பர். இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 15 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் சிவ பக்தர்கள் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் மிகவும் மங்களகரமான ராஜயோகம் உருவாகவுள்ளது. அது தான் லட்சுமி நாராயண ராஜயோகம். ஜோதிடத்தின் படி, சுக்கிரனும், புதனும் கும்ப ராசியில் ஒன்றிணைந்து லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது மகா சிவராத்திரி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மகா சிவராத்திரி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரித்தாலும், வருமானம் சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்பார்ப்பை விட அதிகமாக லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
மகா சிவராத்திரி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். கையில் செல்வம் பெருகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும்.
மகரம்
மகா சிவராத்திரி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக அற்புதமாக இருக்கப் போகிறது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். கடன் தொல்லைகள் குறையும். வங்கி இருப்பு அதிகரிக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.
கும்பம்
மகா சிவராத்திரி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications