Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
12 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: 2025-ல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது
Lakshmi Narayan Rajyog 2025 In Pisces: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. இதனால் சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. இவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் மிகவும் மங்களகரமான ராஜயோகம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் உருவாகவுள்ளது. அதாவது கிரகங்களின் இளவரசனான புதனும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் ஒன்றிணைந்து லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த ராஜயோகமானது ஒருவரது பண வரவை அதிகரித்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

இப்படிப்பட்ட ராஜயோகமானது 2025 பிப்ரவரி 27 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் லட்சுமி தேவியின் ஆசியால் பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது மீனத்தில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சரனகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வேலை மற்றும் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவால் உங்கள் இலக்கை எளிதில் அடைத்து வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தால் எந்த ஒரு விஷயத்திலும் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வேலை தொடங்க இக்காலம் சிறந்ததாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலு நல்ல வெற்றி கிடைக்கும். லட்சுமி தேவியின் ஆசியால் பணக்காரராகும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
