Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
30 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தி நாளில் வக்ரமாக இருக்கும் 3 கிரகங்கள்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!
Krishna Jayanthi 2025: பண்டிகை காலங்களில் கிரகங்களின் நிலைகள் மனித வாழ்க்கையில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 16 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் மீன ராசியில் இருப்பார். அதுவும் தற்போது வக்ர நிலையில் இருப்பார்.
அதே சமயம் நிழல் கிரகங்களாக கருதப்படும் ராகு மற்றும் கேதுவும் வக்ர நிலையில் இருப்பார்கள். 30 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தி நாளில் சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் வக்ர நிலையில் இருப்பார்கள். இப்படி இந்த 3 கிரகங்களும் வக்ரமாக இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அதோடு நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் மற்றும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கும். மேலும் சிக்கிய பணமும் கைக்கு வந்து சேரும். இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தி நாளில் வக்ரமாக இருக்கும் 3 கிரகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
கிருஷ்ண ஜெயந்தி நாளில் சனி, ராகு, கேது வக்ரமாக இருப்பதால், ரிஷப ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் சிறப்பாக முடிவடையும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண மற்றும் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
சிம்மம்
கிருஷ்ண ஜெயந்தி நாளில் சனி, ராகு, கேது வக்ரமாக இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரியின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதனால் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
கிருஷ்ண ஜெயந்தி நாளில் சனி, ராகு, கேது வக்ரமாக இருப்பதால், துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். புதிய வீடு அல்லது வாகனம் யோகம் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மேலும் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் ஆதரவைப் பெறுவார்கள். திட்டமிட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications