Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
18 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Ketu Venus Conjunction In Leo After 18 Years: ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும், பூமியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் சில கிரகங்கள் பல ஆண்டுகள் கழித்து ஒரே ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கும். அவ்வாறு பல ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணையும் கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் சற்று சிறப்பானதாக இருக்கும்.
அந்த வகையில் நிழல் கிரகமாக கருதப்படும் கேது தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசிக்கு செல்லவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த கிரகங்களின் சேர்க்கையால் பல வழிகளில் இருந்து நிதி நன்மைகளைப் பெற்று, நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் ஒன்றிணையும் கேது-சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் நிறைய நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் இந்த சேர்க்கை 9 ஆவது வீட்டில் நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைப்பதோடு, முன்னேற்றமும் ஏற்படும். வங்கி இருப்பு அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கை அதிர்ஷ்ட கதவை திறக்கப் போகிறது. ஏனெனில் இந்த சேர்க்கையானது 2 ஆவது வீட்டில் நிகழவுள்ளது. இதன் காரணமாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை முடிப்பீர்கள். மேலும் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். மார்கெட்டிங், ஊடகம், வங்கி துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நற்பலன்களை அளிக்கும். ஏனெனில் இந்த சேர்க்கை 10 ஆவது வீட்டில் நிகழவுள்ளது. இதன் காரணமாக தொழில் ரீதியாக லாபகரமானதாக இருக்கும். தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வெளிநாட்டு பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
