Latest Updates
-
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்..
2025-ல் சிம்ம ராசிக்கு செல்லும் கேதுவால் இந்த 3 ராசிக்கு பணக்காரராகும் யோகம் இருக்கு.. உங்க ராசி இதுல இருக்கா?
Ketu Transit In Leo 2025: வேத ஜோதிடத்தில் கேது நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இந்த கேது ஒரு ராசியில் சுமார் 18 மாதம் பயணிக்கும். சனி பகவானுக்கு அடுத்தப்படியாக ஒரு ராசியில் நீண்ட காலமா பயணிக்கக்கூடியவர் என்றால் அது கேதுவும், ராகுவும் தான். இந்த கேது எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார்.
நிழல் கிரகம் என்பதால் கேதுவிற்கு சொந்த ராசி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட கேது தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் மே மாதத்தில் கேது ராசியை மாற்றவுள்ளார். அப்போது சூரிய பகவானின் ராசியான சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சிம்ம ராசிக்கு கேது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நுழையவுள்ளார்.

இந்த கேது பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அதுவும் சிலருக்கு கேதுவின் அருளால் பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது 2025 ஆம் ஆண்டின் மே மாதத்தில் நிகழும் கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பணக்கார யோகம் உள்ளது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
2025 ஆம் ஆண்டில் நடக்கும் கேது பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிதாக ஏதாவது ஒன்றை கற்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்த கேது பெயர்ச்சிக்கு பின் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். உறவினர்களுடனான உறவு மேம்படும். வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தாயுடனான உறவு வலுவடையும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் வருமானத்தில் உயர்வைக் காண்பார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல செய்தியைப் பெறக்கூடும். பங்குச் சந்தையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். செல்வம் பெருகுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் புதிய திட்டங்களால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, கேதுவின் அருளால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
