Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
2025-ல் நடக்கும் கேது பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க...
Ketu Transit In Leo 2025: ஜோதிடத்தில் உள்ள 9 கிரகங்களில் ராகு, கேது ஆகிய 2 கிரகங்களும் நிழல் கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களுக்கும் சொந்த ராசி என்று எதுவும் இல்லை. மேலும் இவ்விரு கிரகங்களும் மற்ற கிரகங்களைப் போல் நேர்பாதையில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும். அதோடு இந்த கிரகங்கள் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருக்கும். தற்போது ராகு மற்றும் கேது, மீனம் மற்றும் கன்னி ராசிகளில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி மே மாதத்தில் நிகழவுள்ளன. இந்த பெயர்ச்சியின் போது ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் செல்லவுள்ளனர். கேது சிம்ம ராசியில் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும, சில ராசிக்காரர்களுக்கு இந்த கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 2025-ல் சிம்ம ராசிக்கு செல்லும் கேதுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். தைரியம் அதிகரிக்கும். ஒவ்வொரு துறையிலும் வெற்றிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வங்கி இருப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகள் தலைதூக்கும். எனவே உடல்நலத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார்.இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு 2025 மே முதல் அடுத்த 18 மாதங்கள் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியித்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலை சற்று அதிகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications