Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
கேது சூரிய சேர்க்கையால் அக்டோபர் 17 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
Ketu Sun Conjunction 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அவ்வாறு ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கும். அப்படி கிரகங்களின் சேர்க்கை நிகழும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் சூரியன் செப்டம்பர் 16 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைந்தார். இந்த கன்னி ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறார். இதனால் கன்னி ராசியில் கேது மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது மற்றும் இது அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது.

இவ்விரு கிரகங்களின் சேர்க்கை அவ்வளவு சிறப்பானது அல்ல. இந்த கிரக சேர்க்கைகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும். இப்போது கேது சூரியனின் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். கூட்டு தொழில் தொடங்க நினைத்தால், அதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். இதய நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்திலும், ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் குறையும். வணிகர்கள் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், சற்று ஒத்தி வைப்பது நல்லது. ஏனெனில் விபத்து ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையில் சிக்கி அவதிப்படுவீர்கள். முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நீதிமன்ற விஷயங்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். ரகசிய எதிரிகள் இக்காலத்தில் அதிகம் தொந்தரவு செய்யக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் உங்களின் பணம் திரும்ப கைக்கு வராது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications