கேது நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியப்போகுது..

Ketu Nakshatra Transit 2025: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேதுவிற்கு மற்ற கிரகங்களைப் போல் சொந்த ராசி எதுவும் இல்லை. மேலும் கேது எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிப்பார். இப்படிப்பட்ட கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது கேது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி கேதுவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

கிரகங்களில் கேது ஆன்மீகம், மர்மம், இரட்சிப்பு மற்றும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளின் காரணியாகக் கருதப்படுகிறது. இந்த கேது ஒருவருக்கு திடீர் லாபங்களையும், இழப்புக்களையும் தரும் திறனைக் கொண்டது. ஆன்மீகம் மற்றும் தாந்ரீகத்தில் ஆர்வமுள்ளவர்கள் மீது கேதுவின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.

Ketu Nakshatra Transit 2025 These Zodiac Signs Luck Will Shine From 16 March 2025

இப்படிப்பட்ட கேது மார்ச் 16 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த மாற்றத்தின் போது உத்திரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் நீண்ட காலமாகப் போராடி வந்த அல்லது பெரிய வெற்றிக்காகக் காத்திருந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

இதுவரை வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தவர்களுக்கு இந்த பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இன்னும் சிலருக்கு எதிர்பாராத லாபங்கள் கிடைத்தாலும், சிலர் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக, இதுவரை தங்கள் வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொண்ட சில ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது கேது நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் .

கடகம்

கடக ராசியின் 3 ஆவது வீட்டில் கேது உள்ளார். இந்நிலையில் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல இனிமையான மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்க்கையில் பல வெற்றிகளைக் குவிப்பார்கள். எதையும் பொறுமையாக கையாள்வீர்கள். எப்பேற்பட்ட சிரமத்தையும் எளிதில் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

சிம்மம்

கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் வாய்ப்புள்ளது. நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. கேதுவின் ஆசியால் நீண்ட நாள் போராட்டங்களுக்கான பலன் கிடைக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுவாக உணர்வார்கள், இது அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். மொத்தத்தில் நிதி மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமான பலன்களைத் தரவுள்ளது. ஒவ்வொரு வேலையிலும், திட்டத்திலும் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சில முக்கியமான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். மொத்தத்தில் குடும்ப வாழ்க்கை மற்றும் வணிகத்தில் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள்.

மகரம்

கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தந்தையுடனான உறவு வலுவடையும். பரம்பரை தொழிலில் ஈடுபட்டிருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆன்மீக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

FAQs
ஜோதிடத்தில் கேது யார்?

நவகிரகங்களில் கேது ஒரு நிழல் கிரகமாகும். கேதுவிற்கு என்று தனி ராசி எதுவும் இல்லை. கேது பெரும்பாலும் ஒருவரின் வாழ்க்கையில் முழுமையான பற்றின்மை, இழப்புகள், மனச்சோர்வு, அலைந்து திரிதல் மற்றும் குழப்பம் போன்ற உணர்வைக் கொண்டு வருகிறது.

முதல் வீட்டில் கேது இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

ஜாதகத்தில் முதலாம் வீடான லக்னத்தில் கேது இருந்தால், அந்நபர் முகராசி வாய்ந்தவராக இருப்பார். இவர்களுக்கு ஞானத்தின் மீது ஈடுபாடு அதிகமாக இருக்கும். திறமைசாலிகளாக இருக்கும் இவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். இருப்பினும் இவர்க எதிலும் பற்று இல்லாதவராக இருப்பார்.

BoldSky Lifestyle

Desktop Bottom Promotion