Latest Updates
-
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க!
சூரிய பெயர்ச்சியால் பிறக்கும் கார்த்திகை மாதம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
Karthigai Matha Rasi Palan 2025: ஜோதிடத்தின் படி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றும் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சூரியன் நவம்பர் 16 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிகத்தில் சூரியன் நுழைவதால் தமிழ் மாதமான கார்த்திகை மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் சூரியன் விருச்சிகத்தில் பயணிப்பதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் கார்த்திகை மாதத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, வெற்றிகளையும், நிதி நன்மைகளையும் பெறவுள்ளனர். இப்போது கார்த்திகை மாதமானது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் கார்த்திகை மாதமானது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகளை குவிப்பீர்கள். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வேலையை மாற்றும் எண்ணம் நீண்ட காலமாக இருந்தால், இந்த கார்த்திகை மாதத்தில் அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் குவியும். முக்கியமாக பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் கார்த்திகை மாதமானது உங்களுக்கு மிகுந்த ஆற்றலையும் உற்சாகத்தையும் தரும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் தலைமைத்துவ திறன்கள் பாராட்டப்படும். தொழில் மற்றும் வணிகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், எந்த வேலையை செய்தாலும், வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் கார்த்திகை மாதமானது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். வேலை தொடர்பாக இம்மாதத்தில் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் எந்த வேலையை கையில் எடுத்தாலும், அதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications