50 ஆண்டுகளுக்கு பின் குரு-சுக்கிரனால் உருவாகியுள்ள லாப யோகம்: இந்த 3 ராசிக்கு பணம் குவியப்போகுது..

Jupiter Venus Make Laabh Yog 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றியும், மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்ததோ அல்லது நிலைகளினாலோ யோகங்களை உருவாக்கி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சுமார் 12 ஆண்டுகள் கழித்து மிதுன ராசியில் பயணித்து வரும் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும், அழகு, ஆடம்பரம், காதல் செல்வம் ஆகியவற்றின் காரணியாகவும், அசுரர்களின் குருவாகவும் கருதப்படும் சுக்கிரனும் தங்கள் நிலைகளின் மூலம் லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த லாப திருஷ்டி யோகமானது அக்டோபர் 08 ஆம் தேதி உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் போது குருவும், சுக்கிரனும் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் இருக்கும்.

Jupiter Venus Make Laabh Yog 2025 These Zodiac Signs Get More Money

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த யோகத்தால் பிரகாசிக்கும். மேலும் வருமானத்தில் உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இப்போது குரு சுக்கிரனால் உருவாகியுள்ள லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு லாப யோகத்தால் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். வெளிநாட்டு தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு லாப திருஷ்ட யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் லாப திருஷ்டி யோகத்தால் ஆளுமையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமானவர்கள் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வங்கி இருப்பு அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion