Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
குரு நட்சத்திர பெயர்ச்சியால் நவம்பர் இறுதியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Jupiter Transit In Rohini Nakshatra On 28 November 2024: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். அதோடு அவ்வப்போனது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி குருவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது குரு பகவான் ரிஷப ராசியில், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் இறுதியில், அதாவது நவம்பர் 28 ஆம் தேதி குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனின் நட்சத்திரத்திற்கு குரு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக் கதவு திறக்கப் போகிறது.

நவம்பர் 28 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்லும் குரு பகவான், இந்த நட்சத்திரத்தில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வரை இருப்பார். இப்போது ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்லும் குரு பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நவம்பர் 28 முதல் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கடகம்
குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் உங்களின் இலக்கை எளிதில் அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
தனுசு
குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் திடீர் பண வரவைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் ரீதியாக, பணியிடத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் உயர் அதிகாரிகளின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெற வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வருமானம் அதிகரிக்கும். மேலும் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
