Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
2025-ல் நடக்கும் குரு பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களுக்கு அள்ளித் தரப்போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Jupiter Transit In Gemini 2025: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டில் சனி, குரு, ராகு, கேது போன்ற முக்கிய கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளன. இதனால் இந்த ஆண்டு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளன.
அதுவும் 2025 ஆம் ஆண்டின் மே மாதத்தில் குரு பெயர்ச்சி நிகழவுள்ளது. குரு பகவான் செல்வம், செழிப்பு, அறிவு, ஞானம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது ரிஷப ராசியில் பயணித்து வரும் குரு பகவான், 2025-ல் மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். மிதுன ராசியின் அதிபதி புதன் ஆவார்.

புதனின் ராசிக்கு குரு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிகூம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்குமிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது 2025-ல் நடக்கும் குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
2025-ல் நடக்கும் குரு பெயர்ச்சியின் போது மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதிய தொழிலை தொங்கும் எண்ணம் இருந்தால் அது நிறைவேறும். குருவின் அருளால் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும் தொழில் ரீதியாக பலவிதமான நற்பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக பணிபுரிபவர்கள் குருவின் அருளால் பதவி உயர்வையும், சம்பள உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
2025-ல் நடக்கும் குரு பெயர்ச்சியால் மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் குருவின் அருளால் பிரகாசிக்கப் போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்பட்டு முடிவடையும். குருவின் இந்த நிலையால் அவரது பார்வை 5, 7, 9 ஆம் வீட்டில் இருக்கும். இந்த பார்வையால் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்னும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, தம்பதிகளுக்கு இடையே பிணைப்பும், அன்பும் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்கள் கிடைக்கலாம். சில நல்ல செய்திகளைப் பெறவும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
2025-ல் நடக்கும் குரு பெயர்ச்சியின் போது சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் தொழில் ரீதியாக பலவிதமான நற்பலன்களைப் பெற வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் குருவின் அருளால் 2025-ல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், பிரகாசமாகவும் இருக்கப்போகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications