Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
2025-ல் மூன்று முறை நடக்கும் குருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் பல நஷ்டங்களை சந்திக்கப் போறாங்களாம்...!
Jupiter Transit 2025: 2025 ஆம் ஆண்டு பல்வேறு வகையான கிரக மாற்றங்கள் நடைபெற இருக்கிறது மற்றும் இவை ஒவ்வொன்றும் ராசி சக்கரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். 2025 ஆம் ஆண்டு கணிப்புகளின் படி, முக்கிய கிரகங்கள் சீரான இடைவெளிக்குப் பிறகு தங்கள் நிலையை மாற்றப் போகின்றன, அவற்றில் ஒன்று வியாழன்.
இந்த கிரகம் செல்வம், செழிப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிக்கிறது, மேலும் 2025 ஆம் ஆண்டில் வியாழன் முக்கியமான பெயர்ச்சி அடைகிறது. 14 மே 2025 அன்று, வியாழன் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார், மேலும் அக்டோபர் 18 அன்று மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குள் நுழைகிறார். பின்னர் 11 நவம்பர் 2025 அன்று, அது வக்ர பெயர்ச்சி அடைகிறார், டிசம்பர் 5 அன்று மீண்டும் மிதுன ராசிக்கு செல்கிறார்.

இவ்வாறு, வியாழன் 2025 ஆம் ஆண்டில் தனது நிலையை மூன்று முறை மாற்றுகிறார். இந்த கிரக நிலை சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கப் போகிறது மற்றும் அவர்களின் வாழ்க்கையில் பட தடங்கல்களை ஏற்படுத்தப்போகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் 2025-ல் வியாழனால் துரதிர்ஷ்டத்தை அடையப்போகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
குருபெயர்ச்சி 2025-ல் மிதுன ராசிக்காரர்களின் நிதி வாழ்க்கையில் பல்வேறு சவால்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் தங்கள் வியாபாரம் மற்றும் புதிய முயற்சிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும். அதீத நம்பிக்கை உங்கள் வாழ்க்கையில் அவசர அல்லது மோசமான முடிவுகளுக்கு வழிவகுக்கும், அது தோல்விகளை ஏற்படுத்தும்.
எனவே இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்கள் கவனமாக திட்டங்களைத் தயாரித்து தேவையற்ற அபாயங்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக வாகனம் ஓட்டுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் வன்முறை நிலவும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
குருபெயர்ச்சி 2025-ல் தனுசு ராசிக்காரர்களின் பணியிடத்தில் பல்வேறு வகையான சவால்களை ஏற்படுத்தும். இது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் தவறான தொடர்பு மற்றும் தவறான புரிதலை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்யும் விஷயத்தில், தீவிரமாக சிந்தித்த பிறகே ஈடுபட வேண்டும், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
நஷ்டத்தைத் தவிர்க்க இந்த காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். உங்கள் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், பொறுமையை கடைபிடித்து அந்த விஷயங்களை சுமூகமாக தீர்க்க முயல வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் குருபகவானின் பெயர்ச்சியால் 2025-ல் தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சவால்களை சந்திக்க நேரிடும். அவர்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்து வகையான ஒழுக்கக்கேடான செயல்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும், இல்லையெனில் பல அவமானங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
உங்கள் வணிகம் அல்லது தனிப்பட்ட முதலீட்டில் அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால் அதற்காக சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












