Latest Updates
-
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும்
2026-ல் இரண்டு முறை நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Jupiter Transit 2 Times In 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகம் தான் குரு. இந்த குரு தேவர்களின் குருவாக கருதப்படுகிறார். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான், ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இந்நிலையில் குரு பகவான் 2026 ஆம் ஆண்டில் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார். அதோடு இந்த ஆண்டில் குரு பகவான் 3 ராசியில் பயணிப்பார்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருப்பார். அதன் பின் 2026 ஜூன் 02 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைவார். அடுத்து 2026 அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழைவார். இப்படி 2 முறை குரு பகவான் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக குரு பகவானின் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அதுவும் வருமானத்தில் உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இப்போது 2026-ல் இரண்டு முறை நடக்கும் குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
2026-ல் 2 முறை நடக்கும் குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் சிறப்பான பலன்களைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நல்லிணக்கமும் அதிகரிக்கும். சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும். மக்கள் உங்களின் ஆலோசனையை மதிப்பார்கள். ஒவ்வொரு முயற்சியிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பேச்சால் பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் மற்றும் உங்களின் தகவல் தொடர்பு திறன் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
கன்னி
2026-ல் இரண்டு முறை நடக்கும் குரு பெயர்ச்சியால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உறவுகள் மற்றும் கூட்டு தொழில் மூலம் சிறப்பான பலனைப் பெறுவீர்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பங்குச் சந்தை, லாட்டரி மூலம் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவீர்கள்.
துலாம்
2026-ல் இரண்டு முறை நடக்கும் குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்து, இந்த ஆண்டில் தொடங்கினால், நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications