Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
குரு-சூரியன் உருவாக்கும் கேந்திர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது...
Jupiter Sun Form a Kendra Yog 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகத்தை உருவாக்குவார்.
அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் மார்ச் 02 ஆம் தேதி சூரியனும், மங்களகரமான கிரகமான குரு பகவானும் ஒருவருக்கொருவர் 90 டிகிரியில் இருந்து, கேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த கேந்திர யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

பொதுவாக கேந்திர யோகமானது இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 90 டிகிரியில் இருக்கும் போது அல்லது 4 மற்றும் 10 ஆவது வீட்டில் இருக்கும் போது உருவாகும். இந்த கேந்திர யோகம் உருவாகும் காலத்தில் சனி மற்றும் சூரியன் இருவருமே கும்ப ராசியில் இருப்பர், அதே சமயம் குரு பகவான் ரிஷப ராசியில் இருப்பார்.
இந்த கேந்திர யோகத்தினால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது குரு சூரியனால் உருவாகும் கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தினால், இதுவரை செய்த கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் புதிய உத்திகளால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மேலும் இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாககவும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தால் மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் தங்களின் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவார்கள். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கேந்திர யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்தும் நிறைய லாபம் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











