Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
குருபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் மோசமான விளைவுகளை சந்திக்கப் போறாங்களாம்...!
பொதுவாக கிரகங்கள் அவற்றின் சுற்றுப்பாதையில் நேராகவும் வளைந்த பாதையிலும் நகரும். அக்டோபர் 9 முதல் குருபகவான் தனது வக்ர பெயர்ச்சியைத் தொடங்குகிறது.
சனிக்கு அடுத்தபடியாக மெதுவாக நகரும் கிரகம் வியாழனாகும். சனி ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருக்கும், அதேசமயம் வியாழன் 13 மாதங்கள் அதாவது ஒரு வருடம் மற்றும் ஒரு மாதம் ராசியில் இருக்கிறார். இதேபோல், வியாழன் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறை வக்ர பெயர்ச்சி அடைகிறார்.

வியாழனின் வக்ர பெயர்ச்சி
வியாழனின் இந்த வக்ர பெயர்ச்சி அசுபமானதாக கருதப்படுகிறது. ரிஷப ராசியில் வியாழன் பின்னோக்கி செல்கிறது. இந்த மாற்றம் வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள், தடைகள் மற்றும் சவால்களை ஏற்படுத்தும். மற்றவர்களுடன் தொடர்புகொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது. தங்களின் யோசனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போதும் மற்றவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்கும்போதும் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது
இந்தக் காலகட்டத்தில் உறவுகளுக்குள் வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும் வரலாம். நிதி பரிவர்த்தனைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மறுபுறம், நேர்மறையாகப் பார்த்தால், குருபகவானின் வக்ர பெயர்ச்சி பல நல்ல அனுபவங்களை வழங்கும். வியாழனின் இந்த வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தம். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
வியாழனின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக வியாழன் 3 ஆம் வீட்டில் இருந்தால், அவர்களுக்கு அது கடினமான காலகட்டத்தை உண்டாக்கும். ஏனெனில் மூன்றாம் வீட்டில் இருக்கும் வியாழன் அவர்களின் எதிரியாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் வியாழன் இருக்கும் போது மிகவும் அழிவுகரமான முடிவுகளைத் தருகிறது. இந்த நேரத்தில் நீங்கள் வாழ்க்கையில் சில தடைகளையும் நெருக்கடிகளையும் சந்திக்கலாம். மேலும் வியாழன் வக்ரமாக வரும்போது, மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மற்றும் திருமணம் போன்றவற்றிலும் பிரச்சினைகள் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 8 மற்றும் 11 ஆம் வீடுகளுக்கு அதிபதி வியாழன். இந்த ராசியின் இரண்டாம் வீட்டில் வியாழன் வக்ரமாக சஞ்சரிக்கப் போகிறார். எனவே கும்ப ராசிக்காரர்களுக்கு கடினமான காலங்கள் வரப்போகிறது. கும்ப ராசிக்காரர்கள் கடுமையான பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக சொத்து தொடர்பான விஷயங்களில் அதிக சிக்கல்கள் ஏற்படும்.
நிதித்துறையில் பணிபுரிபவர்களும், பெரிய முதலீடுகளை செய்பவர்களும் இந்த காலகட்டத்தில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் செல்வம் ஈட்டுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வார்கள். திருமண உறவிலும் பல சிக்கல்கள் ஏற்படும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு வியாழன் 6 மற்றும் 9 ஆம் வீடுகளுக்கு அதிபதியாக இருக்கிறார். இந்த வக்ர பெயர்ச்சியின் போது கடக ராசியின் பன்னிரண்டாவது வீட்டிற்குச் செல்கிறார். கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் முதலீடு மற்றும் நிதிநிலை அடிப்படையில் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
இந்த நேரத்தில் முடிவுகளை எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவும். வியாழன் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து, முடிவுகள் மாறலாம். வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் இந்த காலகட்டத்தில் சவால்களை சந்திப்பார்கள். அதிர்ஷ்டங்களும் துரதிர்ஷ்டங்களும் மாறி மாறி வந்து உங்கள் வாழ்க்கையை சோதிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
