Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
குருபகவான் வக்ர பெயர்சி அடைவதால் இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிக்கப் போறாங்களாம்...!
வியாழன் மற்றும் சனிபகவான் ஆகியவை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மெதுவாக நகரும் கிரகங்கள். வியாழன் பொதுவாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பயணிக்க 13 மாதங்கள் ஆகும். எனவே வியாழனின் ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு ராசியை வெவ்வேறு வழிகளில் பாதிக்கும்.
தற்போது, வியாழன் ரிஷபம் ராசியில் இருந்து பின்னோக்கி செல்ல ஆரம்பித்துள்ளார். இது சிலருக்கு சாதகமாக இருக்கலாம் ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதிக சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. அவை எந்தெந்த ராசிகள் அவர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு வியாழனின் சஞ்சாரத்தால் பல தீமைகள் நடக்க வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சக பணியாளர்கள் உங்களின் வேலையைக் கடுமையாக விமர்சிக்கலாம். உங்களின் திறமைக்கு ஏற்ற சரியான அங்கீகாரம் கிடைக்காதது உங்களை மனரீதியாக பலவீனப்படுத்தும்.
அரசுப் பணிகளுக்காக நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய சூழல் ஏற்படலாம். நீங்கள் பல்வேறு நிதி நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். பொருளாதாரச் சுமை அதிகரிப்பதால் குடும்பத்திலும் பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் புதிய வேலையைத் தேடினால், இப்போது அது கிடைக்காமல் போகலாம்.
சிம்மம்
குருவின் வக்ர பெயர்ச்சியால் நீங்கள் எதிர்பாராத பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மற்றவர்களுக்கு உதவுவது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். சிலர் உங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறலாம். மற்றவர்கள் உங்கள் விமர்சிப்பதை கருத்தில் கொள்ளாதீர்கள். வீட்டில் சில பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடக்கும். அதேபோல வெளிநாட்டில் படிக்கவோ அல்லது வேலை செய்யவோ விரும்புபவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் குரு வக்ர பெயர்ச்சியால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அவர்கள் எதிர்பார்த்த வேலையை இழக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உங்களின் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இது பல்வேறு உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும். உங்கள் தற்போதைய வேலையை விட்டுவிட்டால், புதிய வேலையைப் கிடைப்பதற்கு பல தடைகளை சந்திக்க நேரிடும். திருமணமான தம்பதிகளிடையே பிரச்சனைகள் வரலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்ர பெயர்ச்சியால் கலவையான பலன்கள் ஏற்படும். புதிய வேலையைப் பெறுவது கடினமாக இருக்கலாம், ஆனால் வேலை கிடைக்கும். குடும்பத்தில் புதிய பிரச்சினைகள் வரலாம். திருமண செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நேரத்தில் வரன் கைகூடும்.
இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. அதேபோல் உறவினர்களிடம் அதிக உதவிகளை எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. சில நண்பர்கள் உங்களுக்கு நிதி உதவி செய்யலாம். பொறுப்புகள் உங்கள் மேல் மலைபோல் குவியும், இதனால் நீங்கள் அதிக சிரமத்திற்கு ஆளாவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

