Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
குரு பகவானின் அருளால் அடுத்த 119 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ராஜ வாழ்க்கையை வாழப் போறாங்க..
Jupiter Retrograde 2024: வேத ஜோதிடத்தில் குரு பகவான் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். ஞானத்தை வழங்குபவரான குரு பகவான் தேவர்களின் குரு ஆவார். இந்த குரு ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல மகிழ்ச்சியான, செழிப்பான வாழ்க்கையுடன், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்.
கிரகங்களில் குரு ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தற்போது ரிஷப ராசியில் பயணித்து வரும் குரு பகவான், அக்டோபர் 09 ஆம் தேதி வக்ரமாகி பின்னோக்கி பயணித்து வருகிறார். 12 ஆண்டுகள் கழித்து ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வரும் குரு பகவான், அடுத்த 119 நாட்கள் வக்ர நிலையில் தான் இருக்கப் போகிறார்.

குரு வக்ரமாக இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் குரு வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் குரு வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்கார்களுக்கு அடுத்த 119 நாட்கள் நன்றாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் நல்ல லாபத்தையும், வெற்றியையும் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதே வேளையில் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். முக்கியமாக நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குரு வக்ரமாகியுள்ளார். இதனால் வருமானத்தில் பெருமளவில் உயர்வைக் காண்பீர்கள். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். சிலருக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் இக்கால கட்டத்தில் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications