Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
கஜகேசரி ராஜயோகத்தால் ஜூலை 22 முதல் மிதுனம் உள்ளிட்ட 3 ராசிகளின் வசதிகள் அதிகரிக்கப்போகுது..
Gajkesari Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது ராஜயோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதுவும் 2025 ஆம் ஆண்டின் ஜூலை மாதமானது சற்று சிறப்பானது.
ஏனெனில் இம்மாதத்தில் பல ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த ராஜயோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில் ஜூலை 22 ஆம் தேதி ஒரு சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாகவுள்ளது. அது தான் கஜகேசரி ராஜயோகம்.

இந்த ராஜயோகமானது குரு பகவான் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகக்கூடியது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
அதுவும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடைவதோடு, செல்வமும் அதிகரிக்கும். இப்போது ஜூலை 22 ஆம் தேதி உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கஜகேசரி ராஜயோகம் எப்போது உருவாகும்?
ஜோதிடத்தின் படி, குரு பகவானும், சந்திரனும் எப்போது ஒரு ராசியில் ஒன்றிணைகிறதோ, அப்போது கஜகேசரி ராஜயோகம் உருவாகும். இது தவிர குருவும், சந்திரனும் லக்னத்தில் 4 மற்றும் 10 ஆவது வீட்டில் இணைந்திருந்தால் அல்லது சந்திரன் குருவின் மையத்தில் இருந்தால் இந்த யோகம் உருவாகும். அதோடு குரு தனது உச்ச ராசியில் இருந்து சந்திரனுடனோ அல்லது சந்திரன் தனது உச்ச ராசியில் இருந்து குருவுடனோ இருந்தால், கஜகேசரி ராஜயோகம் உருவாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது வசதிகளையும், ஆடம்பரங்களையும் அதிகரிக்கப் போகிறது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புக்கள் தேடி வரும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மனம் மற்றும் உடல் ரீதியான மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம் அல்லது திருமணம் நிச்சயிக்கப்படலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது நற்பலன்களைத் தரும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். பல துறைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் பெருகும். பணிபுரிபவர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் உள்ள பல பிரச்சனைகள் நீங்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு திருமண நடக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பண பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications