Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
நவம்பர் 16-ல் உருவாகும் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Jupiter Moon Make Gajkesari Rajyog On 16 November 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களிலேயே மிகவும் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் தான் சந்திரன். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார்.
இப்படி குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவதால், மற்ற கிரகங்களுடன் இணைந்து அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். அந்த வகையில் சந்திரன் வருகிற நவம்பர் 16 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார்.

இதனால் சந்திரன் ரிஷப ராசிக்கு செல்லும் போது குருவுடன் இணைந்து சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது குரு சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனம், சொத்து வாங்கும் கனவு நிறைவேறும். திடீர் பண வரவு உண்டாகும். தொழில் ரீதியாக, பல நன்மைகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் வேலை பாராப்படும் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏராளமான செல்வத்தைப் பெறுவார்கள். குருவின் ஆசியால் வாழ்க்கை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். நிதி ரீதியாக, பண வரவு சிறப்பாக இருக்கும். குருவின் அருளால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். முக்கியமாக வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்ளுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications