Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
12 ஆண்டுகள் கழித்து உருவாகும் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்டை மூட்டையா பணத்தை அள்ளபோறாங்க!
Jupiter Make Hans Mahapurush Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிக்கக்கூடியவர் மற்றும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த மிதுன ராசியில் குரு பகவான் பயணிக்கும் காலகட்டத்தில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து ஏராளமான ராஜயோகங்களை உருவாக்குவார். அதுவும் இந்த ஜூன் மாதத்தில் குரு பகவான், சூரியன், சந்திரன், சுக்கிரன் போன்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணித்து, மனித வாழ்க்கையில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளார்.

இந்நிலையில் குரு பகவான் வருகிற அக்டோபர் மாதத்தில் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகப் போகிறது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியதாகவும் இருக்கப் போகிறது. இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரும் உதவியாக இருப்பார்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தந்தையுடனான உறவு வலுவடையும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் எதிர்பாராத அளவில் நல்ல உயர்வு ஏற்படும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
