Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
12 ஆண்டுகள் கழித்து வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Jupiter Direct In Gemini On March 2026: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். மேலும் கிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் வரை இருப்பார். அதோடு குரு பகவான் வக்ர நிலையிலும், வக்ர நிவர்த்தி அடைந்தும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
அந்த வகையில் தற்போது குரு பகவான் கடக ராசியில் வக்ர கதியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். அதுவும் மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இந்த பெயர்ச்சியானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இதன் விளைவாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம், வணிகர்களுக்கு நல்ல லாபம் போன்றவை கிடைக்கப்போகிறது. இப்போது மார்ச் மாதத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வங்கி இருப்பு திடீரென்று அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பங்குச் சந்தையில் இருந்து எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தாயுடனான உறவு வலுவடையும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
