27 நாட்களுக்கு அஸ்தமனமாகும் குருபகவான்: எந்த ராசிக்கு சூப்பராவும், எந்த ராசிக்கு மோசமாவும் இருக்கும்?

Jupiter Combust In Gemini On June 2025: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். மிகவும் மங்களகரமான கிரகமாக குரு ஒரு ராசியில் 12 மாதம் வரை இருப்பார். இப்படி ஒரு ராசியில் குரு பயணிக்கும் போது, அஸ்தமனமாகி உதயமாவார். தற்போது குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின் மிதுன ராசிக்குள் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் குரு பகவான் ஜூன் 10 ஆம் தேதி மிதுன ராசியில் அஸ்தமனமானார். இந்த அஸ்தமன நிலையில் குருபகவான் 27 நாட்கள் இருப்பார். குரு பகவான் அஸ்தமனமாவது சற்று முக்கியத்துவம் வாய்ந்தது. குரு அஸ்தமனமாகும் காலத்தில் சற்று பலவீனமாக இருப்பார். இந்த அஸ்தமன நிலையில் குரு பகவான் ஜூலை 09 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் மிதுன ராசியில் உதயமாகி பயணிப்பார்.

Jupiter Combust In Gemini On June 2025 Effects On 12 Zodiac Signs

இப்படி குரு பகவான் அஸ்தமனமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது மிதுன ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவானால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. இருப்பினும், குரு மிதுன ராசியில் அஸ்தமனமாவது உங்கள் எதிர்மறையைக் குறைக்கும். அதிக இழப்பைச் சந்திக்க மாட்டீர்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவை மேம்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். அரசு வேலைகளில் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம். சில நேரங்களில் அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கவில்லை என்று தோன்றலாம். ஆனால் தொடர்ந்து கடினமாக உழைத்தால் நல்ல பலன்களை பெற முடியும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமான ஆதாரங்கள் பாதிக்கப்படலாம். இதன் மூலம் நிதி நிலை சற்று பலவீனமாக இருக்கும். குடும்பத்தில் பழைய பிரச்சனைகள் மீண்டும் தோன்றக்கூடும். இதனால் குடும்ப சூழல் பதட்டம் நிறைந்ததாக இருக்கும். பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு அஸ்தமனமாகியுள்ளார். இதனால் தினசரி வேலைகளில் சற்று மந்தநிலையைக் காணக்கூடும். திருமணமாகாதவர்கள் தங்களின் திருமணத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால், அவற்றில் தாமதம் ஏற்படும். வேலைகள் உடனே முடியாமல், மெதுவாக நடக்கும். அதற்காக பெரிய இழப்பு எதுவும் ஏற்படாது. ஆனால் தடைகளை சந்திக்க நேரிடும். ஆயினும் நேர்மறையான சிந்தனையுடன் செயல்பட்டால், வெற்றியைப் பெறலாம்.

கடகம்

கடக ராசியின் 12 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. இருப்பினும் சில நன்மைகளைப் பெறலாம். அதுவும் செலவுகளை அதிகம் சந்தித்து வந்தால், இக்காலத்தில் அவை குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடன் விஷயத்தில் சிறிது மந்தநிலை ஏற்படலாம். ஒட்டுமொத்தமாக, கடக ராசிக்காரர்கள் குருவின் அஸ்தமனத்தால் பல விஷயங்களில் நன்மை அடைவார்கள், ஆனால் சில இடங்களில் மந்தநிலையையும் காணலாம்.

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் லாப வாய்ப்புக்கள் குறையலாம். காதல் உறவுகளில் பலவீனம் ஏற்படலாம். குரு பகவான் பலவீனமாக இருப்பதால், எதிர்பார்த்ததை விட முடிவுகள் குறைவாக இருக்கலாம். மாணவர்கள் படிப்பில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் பெரிய இழப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் சிறிது சோம்பலை சந்திக்க நேரிடும்.

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வணிகம் அல்லது வேலை தொடர்பான விஷயங்களில் கலவையான பலன்களை பெறுவார்கள். தொழிலில் உள்ள தடைகள் நீங்கும். ஆனால் குடும்ப விஷயங்களில் பிரச்சனைகள் அதிகரிக்கும். முக்கியமாக திருமண வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும். குரு அஸ்தமனமாகியிருப்பதால் அடுத்த 27 நாட்கள் சற்று சுமாராகவே இருக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகியுள்ளார். இதனால் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் எழக்கூடும். திட்டங்கள் நடைபெறுவதில் தாமதத்தை சந்திக்க நேரிடும். சில வேலைகளை முடிக்க முடியாமல் சிரமப்பட நேரிடும். ஆனால் இக்காலத்தில் எதிரிகளின் எண்ணிக்கை குறையும். நம்பிக்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக அடுத்த 27 நாட்கள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகியுள்ளார். இது அவ்வளவு சிறப்பானது அல்ல. இருந்தாலும், ஆரோக்கியம் மேம்படும். சிக்கிய பணம் கிடைக்கும். குழந்தைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகுள் நீங்கும். ஆனால் பண விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளை கவனமாக பேண வேண்டும். கடின உழைப்பை மேற்கொண்டல், வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர முடியும்.

தனுசு

தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நேர்மறை எண்ணங்கள் குறையும். வீடு மற்றும் குடும்பம் தொடர்பான சில பிரச்சினைகள் அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சொத்து தொடர்பான விஷயங்கள் மோசமாகலாம். திருமண வாழ்க்கை நிலையானதாக இருக்கும். வணிகத்தில் தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

மகர ராசியின் 6 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். அரசு வேலைகளில் உள்ள தடைகள் நுங்கும். குழந்தை தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். சண்டை சச்சரவுகள் குறையும். ஆனால் தன்னம்பிக்கை சற்று குறையலாம். மொத்தத்தில் இக்காலத்தில் சற்று கவனமாக இருந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

கும்பம்

கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று மோசமாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு தாமதமாகலாம். பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களில் எச்சரிச்சையாக இருக்க வேண்டியது அவசியம். இக்காலத்தில் ஆபத்தான முதலீடுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

மீனம்

மீன ராசியின் 4 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மற்றும் மனநிலை மேம்படும். வாழ்க்கையில் இருந்த பதட்டங்கள் மற்றும் பிரச்சனைகள் குறையும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். சில விஷயங்களில் எதிர்பார்த்த பலனைப் பெற முடியாவிட்டாலும், ஒட்டுமொத்தமாக இக்காலம் நன்மை பயக்கும் காலமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion