Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
குருபகவானும்-புதனும் வக்ரமாக இருப்பதால் இந்த 3 ராசிக்காரர்கள் பொற்காலத்தை அனுபவிக்கப்போகிறார்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில், புதனும் வியாழனும் மிகவும் முக்கியமான கிரகங்களாகும். தேவர்களின் குருவான குருபகவானும், புத்திக்கூர்மையின் அதிபதியான புதனும் ராசியை பயணத்தை மாற்றப்போகிறார்கள். தேவர்களின் குருவான குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புத்திகாரகனான புதன் நவம்பர் 26 ஆம் தேதி விருச்சக ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
ஜோதிடத்தின் இரண்டு முக்கிய கிரகங்களுமே வக்ர நிலையில் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இந்த வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் நேர்மறை மாற்றங்களையும், சில ராசிக்காரர்கள் எதிர்மறை மாற்றங்களையும் அனுபவிக்கப் போகிறார்கள். புதன் மற்றும் குரு வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகிறார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த வக்ர நிகழ்வால் அதிர்ஷ்டமடையும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதிக நற்பலன்கள் காத்திருக்கின்றன. புதன் சாதகமான திசையில் செல்வதால், மிதுன ராசிக்காரர்களுக்கு அறிவாற்றல் அதிகரிக்கும். நீங்கள் கற்றுக்கொண்டதை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், வியாபாரம் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிக சம்பளத்துடன் வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கலாம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் பலனளிக்கும். வீட்டின் நிதி நிலை வெகுவாக மேம்படும். உங்கள் வீட்டின் முதியவர்களிடம் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் பரிசாக கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த கிரக பெயர்ச்சிகளால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். வேலை அல்லது வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகலாம்.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது நல்ல காலமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தம்பதியர் இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கு மிக நல்ல நாட்கள் காத்திருக்கின்றன. வியாபாரிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொடும் அனைத்தையும் தங்கமாக மாறும் அளவிற்கு அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். எந்தத் தொழிலைத் தொடங்கினாலும், இப்போதும் அதில் அதிக லாபத்தைப் பெற வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நிலம் வாங்க அல்லது வீடு கட்ட தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
வீட்டின் நிதி நிலை மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கலாம். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். குழந்தைகளுடன் பயணம் செய்வது தவிர்க்க முடியாததாகிவிடும். முதியோர்களின் நன்மதிப்பைப் பெற முடியும். அவர்கள் அனைத்து துறையிலும் பிரகாசிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
