June Month Rasi Palan 2025: ஜூன் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு செம சூப்பரா இருக்கப்போகுது...

June Month Rasi Palan 2025: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன.

இந்த யோகங்களால் ஜூன் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது. உங்களுக்கு 2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

June Month Rasi Palan 2025 June 2025 Monthly Horoscope In Tamil

கீழே 12 ராசிக்காரர்களுக்கும் ஜூன் மாதம் எப்படி இருக்கும் என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். உங்கள் ராசிக்கு 2025 ஜூன் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதி அற்புதமான மாதம். கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும் தேடி வரும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பேச்சில் ஒரு உற்சாகம் பிறக்கும். 5 ஆம் வீட்டில் கேது செவ்வாய் கூட்டணியால் குழப்பங்கள் ஏற்படும். புதிய தொழில் வியாபாரங்களில் பண முதலீடு எதையும் செய்ய வேண்டாம். மாத கடைசியில புதிய வேலை கிடைக்கும். லாப ராகு அள்ளித்தரப் போகிறார். விரைய சனியால் சுப விரைய செலவுகள் தேடி வரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! நவகிரகங்களின் பயணம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. பண வருமானம் அதிகரிக்கும். எப்போதோ கடன் கொடுத்த பணம் திரும்ப வராது என்று நினைத்திருந்த பணம் இந்த மாதம் உங்களைத் தேடி வரும். சொல்லும் வாக்கில் வெற்றி கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தில் குரு இருப்பதால், சொல்லும் செயலும் வெற்றியில் முடியும். செவ்வாய் மற்றும் கேது குடும்ப உறவுகளை பாதிக்கும். தொல்லைகள் ஏற்படும். பொறுமை அவசியம். சகிப்புத்தன்மை தேவை. வண்டி வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சுக்கிரன் தொழில் வியாபாரத்தில் லாபத்தை தரப்போகின்றனர். ஜென்ம ராசியில் சூரியன், குரு, புதன் இணைவு உடல் சோர்வையும் மன சோர்வையும் தரும். ஆனாலும் வழக்கம் போல வேலையை செய்யுங்கள். தனிமையில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாதம் ஒருமுறையாவது குல தெய்வத்தை கும்பிட்டால் நல்ல விசயங்கள் தானாக நடைபெறும். காதல் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படலாம், பொறுமையும் நிதானமும் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு சாதிக்கும் வகையில் வேலை அமையும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.

கடகம்

ஜூன் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த மாதமாக அமையப் போகிறது. நிறைய சுப விரைய செலவுகள் ஏற்படும். மன திருப்தியான வேலை அமையும். நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வேலை தேடும் பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வீடு அமையும். வண்டிவாகனம் வாங்கும் யோகம் வரும். மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு கைகூடி வரும். பயணத்தில் கவனம் தேவை. எதிரிகள் விசயத்தில் கவனம் தேவை. இடமாற்றம் நன்மையில் முடியும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் உள்ள சூரியனால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாதத்தில் எழுதும் அரசு தேர்வுகளால் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்கவும் ஏற்ற மாதம் இது. மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு இடம் மாறும் சூரியனால் வருமானம் அதிகரிக்கும், லாபம் கூடும். பொன்னான நேரம் கைகூடி வருகிறது. எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். வெளிநாடு யோகம் கைகூடி வரும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. திருமணம் முயற்சிகளில் இழுபறி ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. சொத்துக்கள் வில்லங்கள் எச்சரிக்கை தேவை. சுக்கிரன் மட்டுமே நல்ல பலன்களை தருவார். சில உடல்நல தொந்தரவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் தீரும். எதற்காகவும் அவசரப்பட வேண்டாம். பொறுமையாக கவனமாக காலடியை எடுத்து வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு அரசு உதவிகள் தேடி வரும். மனதிற்கு பிடித்த வேலைகள் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். இந்த மாதம் வெற்றி மீது வெற்றி தேடி வரும். செய்யும் முயற்சிகளுக்கு பலன் கைகூடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு இம்மாதம் அதி அற்புதமான மாதமாக அமையும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தன வருமானம் அதிகரிக்கும் மாதமாக ஜூன் மாதம் அமைந்துள்ளது.

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியன் மாத முற்பகுதியில் ஏழாம் வீட்டிலும், பிற்பகுதியில் 8ஆம் வீட்டிற்கும் மாறுகிறார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வண்டி வாகன பயணங்களில் நிதானமும் கவனமும் தேவைப்படும். சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் பண விசயங்களில் கவனம் தேவைப்படும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். பூர்வ புண்ணிய சனியால் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. உணவு விசயத்தில் கவனம் தேவைப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! மாத முற்பகுதியில் ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் சூரியன் மன உளைச்சலை தருவார். நினைச்சது ஒன்னு நடப்பது ஒன்றாக இருக்கும். மனக்கவலை நிச்சயமாக மாறும். குரு பகவான் உங்களுக்கு மன சக்தியை அளிப்பார். குருவின் நேரடி பார்வையால் நிறைய நல்ல விசயங்கள் நடைபெறப் போகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. காதலிப்பவர்கள் கவனமாக பேசுங்கள். சின்ன கருத்து வேறுபாடுகள் கூட பிரச்சினையை ஏற்படுத்தி விடும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. அர்த்தாஷ்டம சனியால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும்.

மகரம்

சூரியன் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மனம் விரும்பிய வாழ்க்கைத்துணை அமையும். திருமண வாழ்க்கை சந்தோசத்தை தரும். பணவரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். வேளைப்பளு அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சொந்தமாக வீடு நிலம் வாங்கலாம். அவ்வப்போது மனச்சோர்வு, உடல் சோர்வு ஏற்படும். பெண்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கூடுதல் விழிப்புணர்வும் தேவை. பொறுமையும், நிதானமும் அவசியம். புது முயற்சிகளை எடுக்கும் போது கவனம் தேவை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! உங்களுக்கு இந்த மாதத்தில் புத்திக்கூர்மை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் 4 ஆம் வீட்டில் பயணம் செய்கிறார் மாத பிற்பகுதியில் 5ஆம் வீட்டிற்கு நகர்வது நன்மை தான். குருவின் பார்வை உங்கள் ராசியில் உள்ள ராகுவின் மீது விழுவதால் வீட்டை நிர்வாகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். நல்ல செய்திகள் விரைவில் தேடி வரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! ஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. ஜென்ம ராசியில் சனியின் பயணத்தால் சின்னச் சின்ன சங்கடங்கள் ஏற்படும். மாதத்தின் பிற்பகுதியில் சூரியனின் இட மாற்றத்தால் வேலையில் புரமோசன் கிடைக்கும். குருவின் பார்வையால் சுப விரைய செலவுகள் ஏற்படும். குரு நான்காம் வீட்டில் இருப்பதால் வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். இந்த மாதம் புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும் செயல்களில் நிதானம் தேவை. தினமும் குலதெய்வத்தை கும்பிட்டு விட்டு வெளியே செல்லுங்கள். பவுர்ணமி நாட்களில் சிவ ஆலயம் சென்று வணங்குங்கள்.

Desktop Bottom Promotion