Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
சக்திவாய்ந்த தனசக்தி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
Dhan Shakti Yog On 07 June 2025: வேத ஜோதிடத்தின் படி, அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இவர் கடந்த மே 31 ஆம் தேதி தான் செவ்வாயின் மேஷ ராசிக்குள் நுழைந்தார். இந்த மேஷ ராசியில் சுக்கிரன் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.
அதே சமயம் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இவர் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் வருகிற ஜூன் 07 ஆம் தேதி கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த இரண்டு கிரகங்களின் நிலைகளினால், மிகவும் சக்தி வாய்ந்த தன சக்தி யோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரப்போகிறது. மேலும் கடின உழைப்புக்கான பலன் கிடைத்து, மகத்தான நிதி நன்மைகள் கிடைக்கப் போகிறது. இப்போது தன சக்தி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு தன சக்தி ராஜயோகத்தால் வாழ்க்கையின் பல வழிகளில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆளுமையில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மனதில் நிறைய பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை எழும். லாட்டரி, பந்தயம் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கலாம். ஆனால் அது தீங்கு விளைவிக்கும். எனவே வேறு வழிகளை யோசியுங்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தன சக்தி ராஜயோகத்தால் வெற்றிகளும், செல்வமும் குவியப்போகிறது. வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும். வீடு, வாகனம், சொத்து வாங்கும் கனவு நனவாகும். வெளிநாட்டு வர்த்தகம் அதிகரிக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நன்மைகள் கிடைக்கும். வணிகர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தன சக்தி ராஜயோகமானது நல்ல பண வரவைத் தரும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணத்தில் உள்ள தடைகள் முடிவுக்கு வரும். புதிய வீடு, வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய தொழிலை தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். நிதி நன்மைகளைப் பெறக்கூடும். நிதி நிலைமை வலுவடையும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


