Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
ஜூன் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் சவாலானதாக இருக்கும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
June 2025 Unlucky Zodiac Signs: ஜோதிடத்தின் படி ஜூன் மாமம் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இந்த மாதத்தில் செவ்வாய், சூரியன், புதன், சுக்கிரன், குரு போன்ற முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் சில கிரகங்களின் ராசி மாற்றங்கள் மட்டுமின்றி, நட்சத்திர பெயர்ச்சிகளும் நிகழவுள்ளன. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக, ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகளும், செல்வமும் குவியும் வகையில் இருக்கும். இன்னும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிரமமாக, சவால்கள் நிறைந்ததாக, தொழிலில் ஒருவித குழப்பம், மன அழுத்தம், பணப் பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்கும் வகையில் இருக்கும். இப்போது 2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான மாதமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் சற்று மன உளைச்சல் நிறைந்ததாக இருக்கும். சிறு விஷயங்களுக்கு கூட பதற்றம் அதிகரிக்கலாம். குடும்ப வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் வீட்டு சூழல் அமைதியற்றதாக இருக்கலாம். அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு இருப்பதை விடுத்து, வெளிப்படையாகப் பேசுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் தொழில் தொடர்பான எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கும் போதும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவசரமாக எந்த முடிவையும் எடுக்காமல், நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இம்மாதத்தில் வேலையை மாற்றுவதையோ அல்லது முதலீட்டு முடிவையோ எடுக்க வேண்டாம். பொறுமையைக் கடைப்பிடித்தால் நல்லது. புதிய வேலையை தொடங்க நினைத்தால், அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே சென்சிடிவ்வானவர்களாக, சிந்தனை மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இம்மாதம் அவர்களின் சிந்தனை அவர்களுக்கு தீங்கை விளைவிக்கும். அதிகப்படியான சிந்தனையால் ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கலாம். எதையும் அதிகமாக ஆய்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இம்மாதத்தில் தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுவது நன்மை பயக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் தொழிலில் விரும்பிய வெற்றியை பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. ஆனால் கடினமாக உழைத்தால், அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்காததால் மிகுந்த பதற்றமடையக்கூடும். இருப்பினும் இம்மாதத்தை பொறுமை, ஒழுக்கம் போன்றவற்றை மேற்கொண்டால் சமாளிக்க முடியும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் உங்களுக்கு பண பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். செலவுகள் வருமானத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் பட்ஜெட் பாழாகலாம். இம்மாதத்தில் எந்த செலவையும் திட்டமிட்டு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications