June 2025 Lucky Zodiac Signs: ஜூன் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..

June 2025 Planet Transits Lucky Zodiac Signs: ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களின் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதனால் ஜூன் மாதமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

அதுவும் ஜூன் மாதத்தின் தொடக்கத்திலேயே அசுரர்களின் குருவான சுக்கிரன் ராசியை மாற்றவுள்ளார். அதன் பின் புதன், செவ்வாய், குரு மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களும் அடுத்தடுத்து தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. முக்கியமாக குரு பகவான் ஜூன் மாதத்தில் அஸ்தமனமாகவுள்ளார். புதன் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார். இப்படி கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

June 2025 Planet Transits People Of These Zodiac Signs Will Be Lucky

அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். முக்கியமாக ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளால் 5 ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறவுள்ளார்கள். அதுவும் தொழில், படிப்பு, தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இப்போது 2025 ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் வேலையில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால், எப்பேற்பட்ட வேலையையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் இம்மாதத்தில் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மொத்தத்தில் ஜூன் மாதம் மகிழ்ச்சியான மாதமாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் சாதகமாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்களில் முடிவுகள் சாதகமாக இருக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். கடந்த மாதத்தை விட இம்மாதத்தில் மிகவும் நிம்மதியாக உணர்வீர்கள். இருந்தாலும், நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும். அதுவும் சுக்கிரனின் சுப பார்வை காரணமாக நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பல புதிய சாதனைகளை புரிவீர்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் இம்மாதத்தில் கிடைக்கும். தொழில் வாழ்க்கை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். குருவின் பார்வை விழுவதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். சில விஷயங்களில் சற்று போராட வேண்டியிருந்தாலும், இம்மாதத்தில் நல்ல முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் நல்ல லாபத்தைத் தரும் மாதமாக இருக்கும். செவ்வாய் மற்றும் கேதுவின் பார்வையால் சற்று அழுத்தம் இருக்கும். இருப்பினும் குருவின் 9 ஆவது பார்வை அதிர்ஷ்டத்தை தரும். உடன் வேலை செய்வோர் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். ஆனால் சுப காரியங்களுக்கு அதிகம் செலவழிக்க நேரிடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, May 25, 2025, 10:55 [IST]
Desktop Bottom Promotion