Latest Updates
-
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்
January Month Rasi Palan 2026: புத்தாண்டின் முதல் மாதம் யாருக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும்?
January Month Rasi Palan 2026: எப்போதுமே புத்தாண்டின் முதல் மாதம் சற்று சிறப்பானது. இது ஒரு புதிய ஆண்டின் தொடக்கம் மட்டுமல்லாமல், ஒருவரது நோக்கங்கள், தொழில், உறவுகள் மற்றும் தனிப்பட்ட இலக்குகளை மீட்டமைக்க ஒரு சக்திவாய்ந்த நேரமாகவும் இருக்கிறது. ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் நிகழும் பல கிரகங்களின் பெயர்ச்சிகளால், ஏராளமான மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் ஜனவரி மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரும்.

உங்களுக்கு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஜனவரி மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என 2026 ஜனவரி மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2026 ஜனவரி மாதம் எப்படி இருக்கும் என்பதை அறிய தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜனவரி மாதமானது லட்சியத்தையும், தலைமைத்துவத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. அதாவது இம்மாதமானது திட்டங்களைத் தொடங்க அல்லது தலைமைப் பதவிகளில் இறங்குவதற்கு சக்திவாய்ந்த மாதமாக இருக்கும். வணிகர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறலாம். ஆனால் இம்மாதத்தில் திடீர் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்களை தவிர்க்க தெளிவாக தொடர்பு கொள்ள வேண்டும். திருமணமாகாதவர்கள் துணையை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். ஆனால் மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் கடந்த கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். திட்டமிட்டு செலவழிக்க வேண்டும் மற்றும் நிறைய பணத்தை சேமிக்க முடியும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உணவில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் மனதளவில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஐடி துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். மார்கெட்டிங் மற்றும் மீடியா துறையில் இருப்பவர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வெளிப்படையான உரையாடல்களை வைத்துக் கொண்டால், உறவுகளில் இருக்கும் குழப்பத்தைத் தவிர்க்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன ஓய்வு மிகவும் முக்கியம். எனவே மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள முயலுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் உணர்ச்சி ரீதியாக தீவிரமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். செலவுகளைக் கட்டுப்படுத்தினால் நிதி நிலைமை மேம்படும். உணர்ச்சி ரீதியான நேர்மை பிணைப்பை வலுப்படுத்தும். கடந்த கால பிரச்சனைகள் மீண்டும் தலைத்தூக்கலாம். இம்மாதத்தில் உணர்ச்சி ரீதியான மன அழுத்தம் தூக்கத்தை பாதிக்கலாம். எனவே இம்மாதம் சிறப்பாக இருக்க உணர்ச்சிகளை சமநிலையில் வைத்துக் கொள்ள முயலுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜனவரி மாதமானது பிரகாசமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் மற்றும் பாராட்டு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். காதல் வாழ்க்கை சற்று இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்கள் யாரேனும் ஒருவரால் ஈர்க்கப்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, இம்மாதத்தில் அதிகமாக உழைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழில் ரீதியாக எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் நன்கு தெளிவாக யோசித்து எடுக்க வேண்டும். அப்படி நன்கு தெளிவாக யோசித்து, திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். திறமைகளை மேம்படுத்த இம்மாதம் சிறந்தது. நிதி ஒழுக்கம் மன அமைதியைக் கொண்டு வரும். வாழ்க்கைத் துணையுடன் சிறு பிரச்சனை என்றாலும், அதை அமைதியான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் தீர்க்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதத்தில் குடல் ஆரோக்கியம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சமநிலையைத் தேடுவீர்கள். கூட்டு தொழில் மற்றும் குழுப் பணிகளில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். சட்டம் தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தியானம் அல்லது ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளின் மூலம் இம்மாதத்தில் மன அமைதி மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் ஆழமான மாற்றங்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக, இதுவரை மறைந்திருந்த வாய்ப்புக்கள் வெளிப்படும். இம்மாதத்தில் வேலையைப் பொறுத்தவரை, உணர்ச்சிவசப்படாமல் வியூகத்துடன் செயல்படுங்கள். உணர்ச்சிப்பூர்வமான உறவுகள் வலுப்பெறும், ஆனால் பொறாமையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜனவரி மாதமானது சற்று சாகசம் நிறைந்ததாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மிகவும் ரொமான்டிக்காக இருக்கும். தொலைதூர உறவுகள் வலுப்பெறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தை உறுதியுடனும் தெளிவுடனும் எதிர்கொள்வீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது தலைமை பொறுப்புக்ள் கிடைக்க வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் துணையிடம் உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் உறவு மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதத்தில் எலும்புகள் மற்றும் மூட்டுக்களில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் பல புதிய யோசனைகள் மனதில் எழும். தொழில் ரீதியாக திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி திட்டமிடல் மேம்படும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வழக்கமான தூக்கம் மற்றும் நீரேற்றத்தைப் பராமரிக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் உணர்ச்சி தெளிவையும் ஆன்மீக வளர்ச்சியையும் காண்பீர்கள். தொழில் ரீதியாக, உங்களின் படைப்பாற்றல் பிரகாசிக்கும். இதன் மூலம் தொழிலில் நல்ல பலனைப் பெறுவீர்கள். நிதி உள்ளுணர்வு வலுபெறும். உறவுகளைப் பொறுத்தவரை, இம்மாதம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்க யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications